ஷங்கரின் எந்திரன் படத்தில் வசீகரன், சிட்டி என்ற இரண்டு வேடங்களில் நடித்தார் ரஜினி. இதில் வசீகரன் என்கிற விஞ்ஞானியாகவும் , சிட்டி என்கிற எந்திர மனிதனாகவும் ரஜினி இரட்டை வேடங்களில் நடித்திருப்பார்.

ஆனால், தற்போது உருவாகி வரும் எந்திரன் – 2 வில் இந்த இரண்டு ரஜினிகளுடன் படத்தில் நடிக்கும் ஹீரோவான ரஜினி ரோபோவும், மூன்றாவது வில்லனாக அக்சய்குமார் ரோபோவும் மோதிக்கொள்வதுதான் கதை.

இரண்டு ரோபோக்களும் சண்டை செய்யும் பிரமாண்டமான காட்சியும் உண்டாம். அமெரிக்காவில் முகாமிட்டு ரஜினி, அக்சய்குமார், எமிஜாக்சன் ஆகியோரை வைத்து ரிகர்சல் காட்சிகளை எடுத்தபோது, அந்த ரோபோ சண்டை காட்சியையும் படமாக்கி விட்டாராம் ஷங்கர்.

ட்ரான்ஸ்பார்மர், ஐ. ரோபாட் உள்ளிட்ட முன்னூத்தி சொச்சத்து ஹாலிவுட் படங்களி்ல் வந்த ரோபோவுக்கும் ரோபோவுக்குமான சண்டைகள் போல ஒரு பிரம்மாண்டமான சண்டை இருக்கிறது.

டெக்னீசியன்களைப் பொறுத்தவரை பெரும்பாலானோர்கள் ஹாலிவுட் சினிமாவைச் சேர்ந்தவர்கள். ஆனால் ஷங்கரின் மசாலா வாசனை ஹாலிவுட் ரேஞ்சுக்கு எடுபடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Related Images: