ராஜபக்சேவின் பினாமி நிறுவனமான லைக்கா தமிழ்நாட்டில் பல நூறு கோடிகளை முதலீடு செய்துள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‘விசாரணை’ பிப்ரவரி 5ம் தேதி வெளியாகிறது.

தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தை உலகத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பியதில் வெனிஸ் திரைப்படவிழாவில்  திரையிடத் தேர்வு செய்யப்பட்ட முதன் முதல் படமாக விசாரணை ஆகியிருக்கிறது. .

பின்னர் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு என்று தனியாக எடிட்டிங் பணிகள் நடத்தி தயார் செய்தார்கள். படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்தக் கமர்ஷியல் வெர்ஷனை ஜனவரி 29ம் தேதி வெளியிடலாம் என்று வெற்றிமாறனும், தனுஷூம் தீர்மானித்திருந்தார்களாம். ஆனால் தற்போது இப்படத்தின் அனைத்து உரிமைகளையும் லைக்கா நிறுவனம் இவர்களிடமிருந்து வாங்கியிருக்கிறது.

ஜனவரி 29ம் தேதி ‘இறுதிச்சுற்று’ மற்றும் ‘அரண்மனை 2′ ஆகிய படங்கள் வெளிவர இருப்பதால் விசாரணை’ படத்துக்குப் போதுமான திரையரங்குகள் கிடைக்காது என்று லைக்கா நிறுவனம் ‘விசாரணை’ பிப்ரவரி 5ம் தேதிக்கு தள்ளி வைத்துவிட்டார்களாம்.

தமிழ் சினிமாவில் லைக்கா போனற பினாமி நிறுவனங்களை ஏன் தமிழர்கள் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார்கள் எந்பது தெரியவில்லை.

Related Images: