சன்னி லியோன் ப்ரியங்காவை விட அழகாம்

சமீபத்தில் பாலிவுட் பத்திரிக்கையான  ‘ஸ்டார்டஸ்ட் அதன் விருதுகள் விழாவை நடத்தியது.

விழாவிற்கு சன்னி லியோனும், ப்ரியங்கா சோப்ராவும் வந்திருந்தனர்.. விழா முடிவில்  நடிகை சன்னி லியோனையும், பிரியங்கா சோப்ராவையும் சேர்த்து வைத்து படமெடுக்க புகைப்படக் கலைஞர்கள் அழைத்தனர்.

மிகவும் தயங்கிய பிரியங்கா சோப்ரா  பின்னர் சிறிது நேரம் கழித்து  சன்னி லியோன் பக்கத்தில் நின்று படமெடுத்துக் கொண்டார். அவர் ஏன் தயங்கினார் என்பதைப் பற்றி பத்திரிக்கைகள் ஆளாளுக்கு ஒன்று சொல்ல அதற்கு சப்பைக் கட்டு பதில் ஒன்றை தந்திருக்கிறார் ப்ரியங்கா.

“சன்னி லியோன் பக்கத்தில் நான் அழகாகத் தெரிய மாட்டேன் என்றே முதலில் புகைப்படம் எடுக்கப் பயந்தேன்” என்று ட்வீட் செய்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா. பதிலுக்கு “நானும் அதே போலத்தான் பயந்தேன் டார்லிங். ஆனால் ஊடகங்களின் விருப்பம் நாம் இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே”.என்று பிரியங்காவின் ட்வீட்டிற்கு பதில் ட்வீட்டியிருக்கிறார் சன்னி லியோன்.

நெருப்பில்லாம புகையுமா பாஸ். உண்மையான காரணம் பின்னாடி வெளிவரும்.