எனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது – ராதிகா ஆப்தே

கபாலியில் ஒரு ஷெட்யூல் முடிந்து வந்திருக்கிறார் ராதிகா ஆப்தே. படத்தின் அனுபவங்கள் பற்றிக் கேட்டபோது சகஜமாகப் பேசுகிறார். ஹிந்தியில தாங்க. தமிழ்ல டப் பண்ணி குடுத்திருக்கிறோம் கீழே.

உங்களுக்கு திருமணமாகிவிட்டதாமே !

ஆம் அதிலென்ன அதிர்ச்சி உங்களுக்கு. நான் சினிமாவில் நடிக்க வரும் முன்னரே எனக்கு திருமணமாகி விட்டது. கணவர் லண்டனில் வசிக்கிறார். வருடத்தில் பாதி நாட்கள் நான் லண்டன் போய்விடுவேன். மீதி நாட்களில் தான் சினிமா, நாடகம் எல்லாம்.

சேச்சே ! வருத்தமெல்லாம் இல்லைங்க.. ஒரு சின்ன ஆச்சர்யம்.

என்னுடன் பணியாற்றும் இயக்குநர்களில் சிலருக்கும், சில நடிகர்களுக்கும் நான் திருமணமானவள் என்பது ஏனோ சங்கடமானதாக இருக்கிறது. அதை வெளியில் சொல்லாதே என்றும் எனக்கு அறிவுறுத்துகிறார்கள். எனக்கு அதில் கொஞ்சமும் உடன்பாடில்லை. எனக்கு திருமணமாகிவிட்டது என்பதை மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லவே இல்லை

சினிமாவில் எந்த இடத்தை அடைய விரும்புகிறீர்கள் ?

நம்பர் ஒன் நடிகையாவது என்றெல்லாம் எனக்கு லட்சியமில்லை. மனதுக்குப் பிடித்த படங்களில் நடித்தது போக நாடகங்களில் நடித்தாலே போதும். 4 வருடங்களாக நாடக நடிகையாகவே நான் வலம் வருகிறேன். அது எனக்கு திருப்தியாக இருக்கிறது.

செக்ஸியாக நீங்கள் நடிப்பதன் காரணம் ?

அப்படியெல்லாம் தீர்மானமெடுத்து செக்ஸியாக நடிப்பதில்லை. கதை பிடித்திருந்தால் அது எப்படிப் பட்ட பாத்திரமென்றாலும் நடித்து விடுகிறேன். இமேஜ் பார்ப்பதில்லை. ஒரு குத்தாட்ட பாடலுக்கு ஆடவேண்டி வந்தால் கூட அது பிடித்திருந்தால் கண்டிப்பாகச் செய்வேன்.

கபாலி ரஜினி பற்றி..

நிஜமாகச் சொன்னால் கபாலிக்கு முன்பு வரை ரஜினி சாரை எனக்கு தெரியவே தெரியாது. கபாலி படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வந்தது. அவருடைய அடக்கம், பொறுமை, ஷூட்டிங்கில் அவர் காட்டும் ஈடுபாடு அளவிட முடியாதது. ஷாட் முடிந்ததும் ஓரமாய் போய் அமர்ந்து ஏதாவது புத்தகம் படித்துக் கொண்டிருப்பார் ரஜினி. அவரது ஷாட் வந்ததும் சரக்கென்று எழுந்து வந்து அதே ஆர்வத்துடன் நடிப்பார்.  கடந்த 14 வருடங்களில் சினிமாவில் நான் சந்தித்த மனிதர்களில் மிக மிக வித்தியாசமானவர் ரஜினி சார்.

ரஜினி சாரை பாட்சாவாகத் தெரியுமா ? மாணிக்காகத் தெரியுமா ? அல்லது கபாலியாகத் தெரியுமா ஆப்தே மேடம் ?