ஷகீலாவின் வாழ்க்கைக் கதை படமாகிறது.

மலையாள பட உலகில் 1990 மற்றும் 2000–ம் ஆண்டுகளில் கவர்ச்சி நடிகையாக இருந்த ஷகிலா சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் படங்களை விட அதிக வசூல் குவித்தவர். ஷகிலா படங்கள் வெளி வரும்போது பல நடிகர்கள் தங்கள் படங்களை வெளியிடாமல் தள்ளி வைக்குமளவு ஆபாச சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர் ஷகிலா.

மலையாளத்தில் இருந்து அவரை பலவித குடைச்சல்கள் கொடுத்து வெளியேற்றி தமிழ் நாட்டுப் பக்கம் அனுப்பி விட்டார்கள். இவர் சம்பாதித்த பணத்தையெல்லாம் குடும்பத்தில் யாரோ ஒருவர் சுட்டுவிட்டார்.

தற்போது இவரது வாழ்க்கைக் கதையை படமாக்க இருக்கிறாராம் கன்னட டைரக்டர் இந்தரஜித் லங்கேஷ்.  ஹிந்தி நடிகைகள் சன்னி லியோன் , பிபாஷா பாசு போன்றவர்களிடம் ஷகிலாவாக நடிக்க பேசி வருகிறார்களாம்.

திருமணத்தில்  நம்பிக்கை இல்லாத ஷகிலா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இனிமேலும் செய்துகொள்ள மாட்டாராம். அதனால் ரசிகர்கள் யாராவது அப்ளிகேஷன் போடும் எண்ணம் எதுவுமிருந்தால் விட்டுவிடவும்.