இழுத்து மூடப்பட்டது 36 ஆண்டுகால `சினிமா எக்ஸ்ப்ரஸ்`

1980 ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் துவங்கபட்ட முன்னணி சினிமா இதழான சினிமா எக்ஸ்பிரஸ்` தனது 36 ஆண்டுகாலப் பயணத்தை இந்த இதழோடு நிறுத்திக்கொள்கிறது.

`விடைபெறுகிறோம்`என்ற தலைப்புடன் இடம்பெற்றுள்ள சினிமா எக்ஸ்பிரஸ் தலையங்கத்தில் இதுவரை பணியாற்றிய அனைஅவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு, இழுத்து மூடப்படுவதற்கான காரணம் என்று சொல்ல எங்களிடம் விடை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் ஒரு லட்சம் பிரதிகள் வரை விற்ற சினிமா எக்ஸ்பிரஸின் விற்பனை சமீப காலங்களில் 5 ஆயிரத்தைக்கூட தொடவில்லை. காரணம் பாஸிடிவான சினிமா செய்திகள். சினிமாக்காரர்களைப் பற்றி நல்ல செய்திகளை மட்டுமே எழுதினால் அச்செய்தி சம்பந்தப்பட்டவர்கள் கூடப் படிப்பதில்லை என்பது எக்ஸ்பிரஸ் குரூப்புக்கு தெரியாமல் போனது ஆகப்பெரிய ஆச்சரியம்

ஆனாலும் சினிமா எக்ஸ்பிரஸ்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.