`தனி ஒருத்தி`யை தேடித்தவிக்கும் ராம்சரண்

`தனி ஒருவன்` தெலுங்கு ரீமேக்குக்கான போட்டிகள் ஒருவழியாக ஓய்ந்து, இறுதியாக ராம் சரண் அந்தப் போட்டியில் வெற்றி பெற்று ரீமேக் செய்து நடிக்கும் வேலைகளை ஆரம்பித்திருக்கிறார். தமிழில் இயக்கிய இயக்குநர் மோகன் ராஜாவே தெலுங்கிலும் இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவருக்குப் பதில் இப்போது சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார்.

இந்தக்கூட்டணியின் இப்போதைய பிரச்சினை ஹீரோயினாக யாரைப்போடுவது என்பதுதான். தமிழில் மிரட்டிய நயனை ஏனோ இருவருமே பரிசீலனையில் எடுத்துக்கொள்ளவில்லை. இயக்குநர் சுரேந்தர் ரெட்டி தனது முதல் சாய்ஸாக இலியானாவைச் சொல்ல, ஏற்கனவே `கிக்` படத்தில் நடித்த களைப்பில் வேற யாரையாவது ஃப்ரெஸ்சா புடிக்கலாம் என்று சொல்லிவிட்டார் ராம்சரண்.

தனி ஒருத்தியைத் தேடி தவியாய்த் தவித்துக்கொண்டிருக்கிறார்கள் ராம்சரணும், சுரேந்தர் ரெட்டியும். கடைசிவரை பட்சிகள் எதுவும் சிக்காத பட்சத்தில் ஒரு யு டர்ன் அடித்து இலியானாவை நோக்கி வரவும் வாய்ப்புண்டு என்கிறார்கள் இப்பட வட்டாரத்தினர்.