காங்கிரஸுடம் திமுக மீண்டும் கூட்டணி அமைத்தவுடன் கருணாநிதியை விடவும் அதிக நக்கலுக்கு ஆளாகியிருப்பவர் நக்கத் என்ற இயற்பெயர் கொண்ட குஷ்புதான். இணையதளங்களில் இரட்டை அர்த்தம் தொனிக்கும் கமெண்ட்கள் தொடர்ந்து குவிந்துகொண்டிருக்க, ஒரு கட்டத்தில் `நீங்கள்லாம் அக்கா தங்கச்சி கூட பொறக்கலையா. கருணாநிதி என் அப்பா மாதிரி. அவர் கூட என்னை இணைச்சிப் பேசலாமா? என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஹீட்டர் ஆனார்.12705455_1071863462858681_8339775857763183947_n

அதிலும் குறிப்பாக கார்ட்டூனிஸ்ட் பாலா வரைந்த கார்ட்டூன் வைரலாகப் பரவி குஷ்புவுக்கு வைரஸ் காய்ச்சலே வரவழைத்துவிட்டது.

இன்னும் சிலர் `அக்கா தங்கச்சி கூடப் பொறக்கலையா? என்ற கேள்விக்கு `அந்த அக்காவே நீங்கதான்` என்று பதிலளித்து குஷ்புவை டென்சனின் உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். விரைவில் சைபர் கிரைம் வட்டாரங்களில் குஷ்புவைப் பார்க்கலாம் என்று நம்பப்படுகிறது.

Related Images: