காதலர் தினம் நெருங்கி வரும் வேளையில் தனது காதல் அனுபவங்களைக் கொட்டுகிறார் இசையமைப்பாளர் அனிருத்.

`கடந்த நாலு வருஷமா எனக்குக் காதலே இல்லைங்கிறதுதான் உண்மை. அதுக்கு முன்னால‌ எனக்கு இரண்டு காதல் தோல்விகள். ஒரு காதல் பத்தி எல்லோருக்கும் தெரியும். இன்னொரு காதல் பத்தி எனக்கு மட்டும்தான் தெரியும். என்னுடைய வேலைக்கும், ‘லைஃப் ஸ்டைல்’க்கும் இடையில‌ காதலிக்குன்னு நேரம் ஒதுக்குற‌து ரொம்ப கஷ்ட‌ம். தினமும் மெசேஜ் அனுப்பனும். அவங்க அனுப்பினா அதுக்குப் பதில் அனுப்பணும். வெளியில‌ கூட்டிக்கிட்டுப் போகணும். இப்படி நிறைய ‘கமிட்மென்ட்ஸ்’ இருந்ததால‌, எனக்குக் காதல் கைகூடலை.

காதல் தோல்வியில் இருந்து நல்ல பாடல்கள் பண்ண கத்துக்கிட்டேன். ஒரு கட்டத்துல ‘என்னோட காதல் தோத்துப் போனதாலதான் நான் கம்போஸ் பண்ற ‘சாங்ஸ்’ எல்லாம் சக்சஸ் ஆகுதோ’ன்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். இப்படி நினைக்கிறது பிரச்சினைன்னு எனக்குத் தெரியுது. ‘என்னிக்காச்சும் ஒரு நாள் இது மாறும்’னு நினைக்கிறேன். எனக்கு ‘இசை கடவுள் கொடுத்த கொடை’ன்னு சொல்றதுக்கான‌ வயசு கிடையாது.

எனக்குத் தெரிஞ்சு என்னோட அஞ்சு பிரச்சினைகளைச் சொல்லிடுறேன். அந்தப் பிரச்சினைகள்தான் என்னோட காதல் கைகூடாதத‌ற்குக் காரணமா இருக்கும்னு நினைக்கிறேன்.

* மத்தியானத்துல இருந்துதான் என்னோட‌ நாளே ஆரம்பிக்கும். அதனால மத்த விஷயங்களுக்கு என்னால‌ நேரம் ஒதுக்க முடியாது.

* இசையமைப்பாளர் அப்படிங்கிற எண்ணத்திலேயே ஒடிக்கிட்டு இருப்பேன்.

* தினமும் ஒரு மணி நேரம் போன்ல‌ பேசணும், வெளியே கூட்டிக்கிட்டுப் போகணும்னு பிளான் பண்ணா, நான் எங்கே கூட்டிட்டுப் போக முடியும்? அப்படியே போனா அடுத்த நாள் பேப்பர்ல போட்டோவோட‌ வந்துடும். பிரைவசி மிஸ் ஆகுது இல்லையா?

* என்னை யாராவது லவ் பண்ணாங்கன்னா அவங்களோட நான் ரொம்பவும் ‘அட்டாச்’ ஆகிடுவேன். அதுவே பெரிய பிரச்சினையாகுது.

* நான் காதலிக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருப்பேன். அந்த சந்தோஷத்துல தலை கால் புரியாம நிறைய தப்பு பண்ணி, ரொம்ப அடி வாங்கிட்டேன். அதனால இப்போ அந்தத் தப்பெல்லாம் பண்ணக் கூடாதுன்னு முடிவெடுத்துட்டேன்.

Related Images: