`ராஜா ஆயிரம்` கவலையெல்லாம் பறந்தே போயிரும்…

விஜய் டி.வி. இன்று நடத்தும் ராஜா ஆயிரம் நிகழ்ச்சிக்கு குறைந்த பட்சம் ஐம்பதினாயிரம் ரசிகர்களாவது வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக அந்த டி.வி.யின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.Vijay-TV-live-streaming-music-director-%E2%80%8EIlayaRaja-1000%E2%80%AC-Function-27-2-2016

சென்னை ஒய்.எம்.சி.ஏ. நந்தனம் மைதானத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான விளம்பரங்களும் இதுதொடர்புடைய இளையராஜாவின் பேட்டிகளும் விஜய் டிவியில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த விழாவில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்துகொள்ள உள்ளார்கள். பாலிவுட்டிலிருந்து அமிதாப் பச்சன், தெலுங்கு படவுலகைச் சேர்ந்த சிரஞ்சீவி, மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்டோர் இதில் பங்கு பெறுவார்கள் எனத் தெரிகிறது.

இதுபற்றி தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கலைப்புலி தாணு ஒரு பேட்டியில் கூறும்போது, இளையராஜாவைக் கெளரவப்படுத்த இந்த விழாவில் கலந்துகொள்ள திரையுலகினர் ஆர்வமாக உள்ளார்கள். இளையராஜாவைப் பெருமைப்படுத்தும் இந்த நிகழ்ச்சியை முன்நின்று நடத்தும் விஜய் டிவிக்கு வாழ்த்துகள் என்று கூறினார். தமிழ் திரையுலகிலிருந்து ரஜினிகாந்த், கமல் ஹாஸன் ஆகியோரும் பங்கு பெறவுள்ளனர்.

பிரச்சினைகளை வீட்டு மூலையில ஒரு ஓரமா விட்டுட்டு ராஜா ஆயிரம் நிகழ்ச்சிக்கு கிளம்புங்க.கவலைகள் பறந்தே போயிரும் பாருங்க.