சீமான் துணிந்து இம்முறை களத்தில் இறங்கியுள்ளார். தேர்தலில் திமுகவும், அதிமுகவும் மட்டுமே கதி என்று எப்போதும் மற்றைய கட்சிகள் சேர்ந்தே நின்றிருக்கின்றன. ஆனால் திமுகவும், அதிமுகவும் அவர்கள் செய்துவந்த கொஞ்ச நஞ்ச மக்கள் நலன் செயல்களையும் விட்டுவிட்டு வெறும் இலவசங்களைக் கொண்டே ஆட்சியமைத்துவிடலாம் என்று நினைப்பதும்,டாஸ்மாக், பன்னாட்டு கம்பெனிகளுக்கு தமிழகத் தொழில்களை திறந்து விடுவது உட்பட தமிழகர்களின் நலன்களுக்கு விரோதமாகவே செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மக்கள் நலக் கூட்டணி, சீமான் போன்றவற்களின் தனித்த முயற்சி வெற்றியைத் தருமா அல்லது அதிமுக அதிருப்தி  ஓட்டுக்களை திமுகவுக்கு போகவிடாமல் தடுத்து மீண்டும் அதிமுகவுக்கே வெற்றி தருமா என்கிற கேள்வி பிரதானமாக இருந்தாலும், மாற்று அரசியலை நோக்கி மக்கள் நகர்வார்கள் என்கிற நம்பிக்கையும் ஒரு ஓரத்தில் உண்டாகிறது.

சீமான் அறிமுகப்படுத்தியுள்ள வேட்பாளர்கள் சாதரண நடுத்தர மக்கள் என்பது அதிலிருக்கும் அழகு. சீமான் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி ஆற்றிய உரை..

Related Images: