சிம்பு, நயன்தாரா, ஆன்ட்ரியா நடித்து, பாண்டிராஜ் இயக்கியுள்ள ‘இது நம்ம ஆளு’ திரைப்படம் திரைக்கு வர தயாராகியிருக்கிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. மீதம் உள்ள பாடல் காட்சிகளை முடித்து படத்தை வெளியிட தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

‘இது நம்ம ஆளு’ படத்தை வருகிற மார்ச் 25–ந்தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதேநேரத்தில், கார்த்தி, நாகார்ஜூனா தமன்னா இணைந்து நடிக்கும் ‘தோழா’ படத்தையும் மார்ச் 25–ந்தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சிம்பு நீண்ட நாட்களுக்குப் பின் நடித்து வெளியாகவிருக்கும் படம் என்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்கிறது. அத்தோடு பீப் சாங் அது இது என்று நெகட்டிவ்வாக இருந்தாலும் மார்க்கெட்டிங் ஆகி விட்டிருக்கிறார் சிம்பு. கார்த்திக்கும் படங்கள் வந்து கொஞ்ச மாதங்கள் ஆகிவிட்டதுதான். முதன் முறையாக கார்த்திக் படமும், சிம்பு படமும் களத்தில் இறங்குகின்றன.

எது தியேட்டரில் நிலைக்குமோ? வெய்ட் செஸ்துனானே.

Related Images: