தமிழில் ‘மானஸ்தன்’ சரத்துடன் ‘சண்டமாருதம்’ மற்றும் ‘காவல்’ படங்களில் நடித்து யாரும் கேட்பாரற்று கிடந்த மன்னரா சோப்ரா தெலுங்குப்பட உலகில் கொடிகட்டிப்பறக்க ஆரம்பித்திருக்கிறார்.

தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கும் ரப், சுனிலின் ஜக்கன்னா மற்றும் சாய் தரன் தேஜாவுடன் திக்கா என்று மாறிமாறி நடித்துக் கொண்டிருக்கிறார்.  மேற்படி மூன்று படங்களுமே மன்னராவின் கால்ஷீட்டுக்காக காத்திருந்து படப்பிடிப்பை திட்டமிடுவது குறிப்பிடத்தக்கது.

பூரி ஜெகன்நாத் படத்திற்காக கொல்கத்தா சென்றிருக்கும் மன்னரா, ஹோலி பண்டிகையை ரப் படக்குழுவுடன் கோலாகலமாக கொண்டாடி வருகிறார். “3 படங்களும் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை. வருண் தேஜாவுடன் இணைந்து நடிப்பதை மகிழ்ச்சியாகக் கருதுகிறேன்” என்று டோலிவுட் வாய்ப்புகள் குறித்து சமீபத்திய பேட்டியில் மன்னரா தெரிவித்திருக்கிறார்.

இவரது அக்காதான் பாலிவுட்டின் பிரபலம் பிரியங்கா சோப்ரா என்கிற தகவல் தலைகீழாக மாறும் வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது.

Related Images: