தனது படபடப் பேச்சாலும்,  மெட்ராஸ் படத்தில் தனித்துவமான நடிப்பாலும் கவர்ந்தவர் ‘மெட்ராஸ் ஜானி’ கதா பாத்திரத்தில் நடித்த ‘ஹரி’.
வட சென்னையை பூர்விகமாக கொண்ட ஹரி ஒரு ‘மைம்’ கலைஞர். குயிலோ, மயிலோ! சின்னதோ, பெரியதோ! தனக்கு கொடுக்கும் கதாப்பாத்திரத்தை உள்வாங்கி கொண்டு, அந்த கதாப்பாத்திரமாகவே மாறும் திறன் ஹரியிடம் உண்டு.
 
‘அட்டக்கத்தி’, ‘மரியான்’  மற்றும் ‘மெட்ராஸ்’ படங்களில் ஹரியின் நடிப்பு குறிப்பிடத்தக்க அளவில் வெளிப்பட்டது.  தற்போது ‘டார்லிங் 2’ டிரெய்லரில் திக்குவாய் கதாப்பாத்திரமாக வரும் ஹரி அவரது நடிப்பை மெருகேற்றியிருக்கிறாரா என்பது படம் வந்தால் தெரியும்.
“என்னுடைய ஜானி கதாப்பாத்திரம் மக்களின் மனதில் இடம் பிடிக்க ஒரு வாய்ப்பை பெற்று தந்தது; அதேபோல் இந்த பாலாஜி கதாப்பாத்திரமும் அமையும் என்று நம்புகிறேன். இந்த இரண்டு பாத்திரங்களும் முற்றிலும் வெவ்வேறு அம்சங்களை கொண்டது, என்னுடைய முழு திறமையையும் ‘டார்லிங் 2’ படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறேன்” என்று நம்பிக்கைப் புன்னகையுடன் சிரிக்கிறார் ஹரி.

Related Images: