லிங்குசாமி போடப் போகும் ‘பீப்’ பாடல்

விஷாலும் லிங்குவும் சண்டைக் கோழிகளாகி விட சண்டைக் கோழி பார்ட் 2 பணாலாகிப் போனது. எனவே அப்படத்தை டீலில்விட்டு தமிழ் – தெலுங்கில் அல்லு அர்ஜுனை வைத்து இயக்குகிறார் லிங்குசாமி. இந்தப் படம் ஏப்ரல் மாத இறுதியில் தொடங்குகிறது.

லிங்குசாமியின் படங்களுக்கு தனி நிறத்தை தந்தவை யுவனின் இசை. லிங்குசாமிக்கும் யுவனுக்கும் இப்போது ஏழாம் பொருத்தம். அதனால் தனது புதிய இரு மொழிப் படத்துக்கு எட்டாம் பொருத்தமான அனிருத்தை ஒப்பந்தம் செய்துள்ளார்.
பீப் பாடலில் ப்ரையாகிப் போன அனிருத் தற்போது மீண்டும் படங்களை இசையமைக்கும் வேலையை ஒழுங்காகச் செய்வாரா? இல்லை இதிலும் பீப் போட்டுத் தான் சாங் போடுவாரா? அந்த சிம்பு பகவானுக்கே வெளிச்சம்.