’பலே கிருஷ்ணா’ பெண்களை கிஸ் பண்ணனும் இல்லைன்னா கர்ப்பமாக்கணும்..

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பே ரிடயர்மெண்ட் வாங்கிக்கொண்டு பேரன் பேத்திக்ளுடன் கொஞ்சி விளையாட வேண்டிய வயதில் அதே வயதுப் பெண்களுடன் டூயட் பாடி தெலுங்கு சினிமாவில் காமெடி கதாகாலட்ஷேபம் பண்ணிக்கொண்டிருப்பவர் பாலையா என்கிற பாலகிருஷ்ணா.

இவர் ஹைதராபாத்தில் நடந்த ‘சாவித்ரி’ பட ஆடியோ விழாவில் பெண்களைப் பற்றி மிகவும் தரக்குறைவாகப் பேசி சிக்கலில் மாட்டிக்கொண்டார். ‘என் படத்தில் பெண்கள் சும்மா வந்து போவதை என் ரசிகர்கள் விரும்புவதில்லை.ஒன்று நான் அவர்களை முத்தமிட வேண்டும் இல்லை கர்ப்பமாக்க வேண்டும் என்றார்.

இதை கேட்டு மேடையில் இருந்த நடிகைகள் முகம் சுளித்தனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மைத்துனரான பாலகிருஷ்ணா பெண்களை பற்றி இவ்வாறு பேசியுள்ளது பலரையும் கோபம் அடைய வைத்துள்ளது.

இந்நிலையில் பெண்களை பற்றி அவதூறாக பேசியதாக பாலகிருஷ்ணா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நான் பெண்களை அவமதிக்க அவ்வாறு பேசவில்லை. என் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பற்றி தான் கூறினேன். மன்னித்து விடுங்கள் என்று பாலகிருஷ்ணா பின்னர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்தக் கொடுமை சரியாக மகளிர் தினத்தன்று நடந்தது என்பது இன்னொரு கொடுமை.