ரஜினி இனி எந்தத் தேர்தலிலும் தாக்கம் ஏற்படுத்தமாட்டார் ! – ஈ.வி.கே.எஸ்

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் துடுக்குத் தனமாகக் கருத்துக்களை வெளியிடுவதில் பெயர் பெற்றவர்.
தற்போது அவருக்கு வேறு ஆட்கள் யாரும் வம்புக்குக் கிடைக்கவில்லை போலும். ரஜினிகாந்தைப் பிடித்துக் கொண்டார். நேற்று செய்தியாளர்களுக்கு  இளங்கோவன் பேட்டியளித்தபோது, ரஜினிகாந்த்தை காங்கிரஸ் சார்பாக சந்திக்க எண்ணமுள்ளதா என்கிற கேள்விக்கு
“இப்போது விஜயகாந்தை பற்றிதான் அனைவரும் பேசுகிறார்கள். ரஜினி பற்றி யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. ரஜினியால் இனி எந்தத் தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. கடந்த தேர்தலில் கூட அவரால் எந்த தாக்கத்தையும் எற்படுத்த முடியவில்லை” என்றார் ஈவிகேஎஸ் தெனாவெட்டாக.
சரி தான். ரஜினி எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தமுடியாதவர் என்றால் பா.ஜ.கவின் பெரும் தலைவர்கள் சும்மா சும்மா வந்து ரஜினி வீட்டில் டீ சாப்பிட்டுவிட்டு ஏன் போகிறார்கள் ? ரஜினிகாந்த்தோ பா.ஜ.கவுக்கு இருக்கும் கெட்ட பெயர்களை மனதில் கொண்டு அவர்கள் பின்னால் போவதா என்று யோசித்து நின்றுவிட்டார். ரஜினி ஆன்மீகவாதி தான். ஆனால் அவர் அதற்காக ஆன்மீகத்தை வைத்து அசிங்கமாக அரசியல் நடத்தும் கட்சிகளுடன் போய்ச் சேருவார் என்று எதிர்பார்த்தால் எப்படி நடக்கும் ?
இதுகூடத் தெரியாத ஈ.வி.கே.எஸ், ரஜினி எங்கே காங்கிரஸ் பக்கம் கூப்பிட்டு வராமல் பா.ஜ.க பக்கம் தாவி விடுவாரோ என்று கடுப்பாகி உளறிக் கொட்டியது தான் இந்தப் பேச்சு. இதுக்காக ரஜினி ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கப் போறார் பாருங்க !.