சேரன் என்னும் இயக்குநரின் வருகை…தியேட்டருக்கு

சினிமா டு ஹோம் என்னும் புதிய முயற்சியாக படங்களை தியேட்டரில் வெளியிடாமல் நேரடியாக வீடுகளுக்கே கொண்டு சேர்க்கும் சேரனின் திட்டம், சக கலைஞர்களின் ஒப்புதல் இல்லாமல் படுதோல்வியில் முடிந்தது.

இத்திட்டத்தில் அவர் வெளியிட்ட ‘ஜே.கே.என்னும் நண்பனின் வாழ்க்கை’ பட நாயகனின் வாழ்க்கை போலவே பரிதாபமாக இருந்தது.  ஆனாலும் ஆபரேசன் தோல்வி, பட் நோயாளி பொழச்சுக்கிட்டார் கதையாக படம் சம்பந்தமான விமரிசனங்கள் சேரனுக்கு சாதகமாகவே இருந்தன. ‘இந்தப் படத்தை குறிப்பா, நித்யா மேனனை பெரிய ஸ்கிரீன்ல பாக்கணும் சேரன். அந்த ஃபீலே வேற’ என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து வேண்டுகோள் வைத்த நிலையில் வரும் ஏப்ரல் 14 அன்று படத்தை தியேட்டர்களுக்கு கொண்டுவரும் முடிவை அறிவித்திருக்கிறார் சேரன்.

இதற்கு விநியோகஸ்தர்களும் தியேட்டர் உரிமையாளர்களும் பச்சைக்கொடி காட்டியிருப்பதையும் உறுதி செய்திருக்கிறார் ஜே.கே. அப்ப ஓகே.