நலிந்த கலைஞர்களுக்கு தமிழக அரசு கொடுக்கும் ஓய்வு ஊதியமான 1500 ரூபாய் ஒரு மாதத்துக்குப் போதவில்லை என்றும் அதை உயர்த்தித் தரவேண்டும் என்றும் தமிழக அரசுக்கு மனு கொடுத்துள்ளார் கொல்லங்குடி கருப்பாயி.  அம்மா ஸ்டிக்கர் எதுவும் ஒட்டமுடியாது என்பதால் வழக்கம் போல அம்மா ஆணைகள் எதுவும் இடவில்லை.

ஆண்பாவம் படத்தில் பாண்டியராஜனுக்கு பாட்டியாக வந்து பட்டையைக் கிளப்பியவர் தான் கொல்லங்குடி கருப்பாயி. மதுரை -தொண்டி சாலையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகியான இவர் சினிமாவில் பல நாட்டுப்புற பாடல்களைப் பாடி பிரபலமானவர். பின்பு படங்கள் இல்லாமையால் தனது பழைய கிராம வாழ்க்கைக்குத் திரும்பி விட்டார்.

இவரின் நிலையைக் கேள்விப் பட்டு  நடிகர்கள் சங்க பொதுச்செயலாளர் விஷால் உதவி செய்துள்ளார். இந்தச் செய்தியை அறிந்த அடுத்த கணம், விஷால் தன் நண்பர்கள் மூலம் அவரை அணுகி தேவையான உதவிகளைச் செய்துள்ளார்.

சுமார் பத்து படங்களுக்கும் மேல் நடித்திருந்தும் தன்னை நடிகர் சங்க உறுப்பினராகச் சேர்க்கவில்லை என மிகவும் வருத்தமடைந்த கொல்லங்குடி கருப்பாயியை , ஒரு வாரத்துக்குள் உறுப்பினராக்கி ஆவண செய்யும் படியும் உத்தரவிட்டுள்ளார் விஷால்.

வயதானவர்களின் பென்ஷன் பணத்துக்கு வட்டி போடுவதிலிருந்து வயதானவர்களை விளிம்புக்குத் தள்ளி விடுவதில் இந்த அரசுகளின் கொள்கைகள் வ்வ்வெளங்கி வரும் நேரத்தில் வயதான சினிமா கலைஞர்களை மட்டும் எப்படிக் கண்டுகொள்ளும் ? அது அம்மாவோ, தாத்தாவோ இல்லை கேடியோ யாராக இருந்தாலும் சரி. விஷால் ஏதோ முடிந்ததைப் பண்ணுகிறார் நடிகர் சங்கம் மூலம். நல்ல முயற்சி.

Related Images: