நிக்கி கல்ராணிக்கு காலில் கண்டம்.

நிக்கி கல்ராணி லாரன்ஸ் நடிக்கும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் தற்போது நடித்து வருகிறார். இது தெலுங்கில் ஹிட்டான பட்டாஸ் படத்தின் தமிழ் தழுவல். ஆர்.பி.சௌத்ரி படத்தை தயாரிக்க, நிக்கி கல்ராணி ஜர்னலிஸ்டாக இதில் நடிக்கிறார்.

;சென்னையில் நடந்த ஷூட்டிங்குக்கு காரில் வந்து இறங்கின கல்ராணியைப் பார்த்ததும் கல்நெஞ்சங்களே கலங்கின. காரணம் நிக்கி கல்ராணியின் வலது காலில் பெரிய கட்டு.

எந்தத் தீவிரவாதி இக்கொடிய காரியத்தைச் செய்தான் என்று நீங்கள் நெஞ்சு கொதித்து எழும் முன் அவரே சொல்லிவிட்டார் இது சின்னக் காயம் தான் என்று. பெங்களூருவில் உள்ள தனது வீட்டின் கதவை காலால் தள்ளி திறக்க முயன்றிருக்கிறார் நிக்கி கல்ராணி. ஜாலியாக ஆட்டம் போட்டுக் கொண்டே திறந்ததால் கால் வழுக்கி கிரிலில் கால் மாட்டி சதை பிறண்டிருக்கிறது.

இருந்தாலும் செல்லம் நிக்கி கல்ராணியின் கால் விரைவில் சரியாக காக்களூர் காளியம்மனுக்கு கால்நடையாக நடக்க அன்பு நெஞ்சங்கள் கிளம்பினால் அம்மன் கண் திறக்காமலா போய்விடும்.?