பிரகாஷ்ராஜ் போட்டுக் கொடுத்த பம்ப்செட்.

நடிகர் பிரகாஷ் ராஜ் பெரிய நடிகராக வளர்ந்து விட்டாலும் தனது பிரகாஷ் ராஜ் பவுன்டேஷன் வழியாக சத்தமில்லாமல் நலப் பணிகளையும் தொடர்ந்து செய்து வருகிறார்.
அப்படி சமீபத்தில் தனது மாநிலமான தெலுங்கானாவில் ஒரு கிராமத்தை தத்தெடுத்தார். தெலுங்கானா மாநிலம் மெகபூப் நகர் அருகில் உள்ள கம்மடனம். என்கிற கிராமத்தை தத்தெடுத்து பல்வேறு அடிப்படை வசதிகளையும், நலத்திட்ட உதவிகளையும் செய்திருக்கிறார்.
கம்மடனம் கிராம மக்களின் முக்கிய பிரச்சனை குடிநீர் தட்டுப்பாடு. அதனை தீர்க்கும் விதமாக, ஆழ்குழாய் கிணறு அமைத்து மின்சார மோட்டாரையும் பொருத்தினார். இதனால் அந்த கிராம மக்களுக்கு நீண்ட காலமாக இருந்து வந்த குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைத்துள்ளது.
தனது பிறந்த நாளுக்கு முன்பாக சில மக்களுக்கு ஒரு விடிவு கொடுக்க முடிந்தது சந்தோஷம் என்று தனது ட்விட்டர் தளத்தில் மகிழ்வோடு பகிர்ந்துள்ளார் பிரகாஷ்ராஜ்.
வாழ்த்துக்கள் சார்.