கடைசியா கலையரசனும் வேலையக் காட்ட ஆரம்பிச்சிட்டாரு பாஸ்…

இயக்குநர் சுசீந்திரனிடம் ‘பாண்டியநாடு’, ‘ஜீவா’ ஆகிய இரு படங்களில் பணியாற்றிவிட்டு  கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வந்து உஷா கிருஷ்ணன் இயக்கும் படத்துக்கு ‘ராஜா மந்திரி’ என்று பெயரிட்டிருக்கிறார்.

படத்தின் நாயகன் ’மெட்ராஸ்’ புகழ் கலையரசன். நல்ல நடிகர் எனும் அங்கீகாரத்துடன் டார்லிங் 2, கபாலி எனமுக்கியமான் படங்களை எதிர் நோக்கி வரும் இவருக்கு ‘ராஜா மந்திரி’ ஒரு மைல் கல் படமாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. காளி  வெங்கட் படத்தில் இன்னொரு நாயகன் என்றே சொல்லலாம். இவரது கதாப் பாத்திரம் நமது வாழ்வில்நாம் சந்திக்கும் அன்றாட ஒரு மனிதனின் கதாபாத்திரமாக இருக்கும். இவர்களுடன் ‘ நாடோடிகள்’ கோபால், சரவணா சக்தி,காயல் பெரேரா, சூப்பர் குட் சுப்பிரமணி, வைஷாலி,  ரவி, ராஜா பாண்டி, ஆனந்தி  போன்ற திறமையானகலைஞர்களுடன்  இந்த படம் உருவாகி உள்ளது.

20 க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷாலினி இந்த படத்தில் ராணியாக, நாயகியாக வலதுகால் எடுத்துவைக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க பி ஜி முத்தையா படம் பிடிக்க வி.மதியழகன் தயாரிக்க படம் வெகுவாக வளர்ந்து வருகிறது.

நாயகி ஷாலினியை இயக்குநர் உஷா கிருஷ்ணனுக்கு அடையாளம் காட்டியர் சாட்சாத் கலையரசன் என்பது குறித்துக்கொள்ளத்தக்கது.