இளையராஜாவுடன் கைகோர்த்த ‘ராஜாதந்திரம்’ பார்ட்2’

கடந்த வருடம் வெளி ஆன படங்களில் ரசிகர்களின் இதயத்தை கொள்ளை அடித்த முக்கியமான படம் ‘ராஜதந்திரம் ‘. மிகவும் நேர்த்தியான படப்பிடிப்பு, இயக்கம், நடிப்பு என எல்லோராலும் பாராட்டப் பட்ட இந்தப்படம் விமர்சகர்கள் இடையே பெரிதும் பிரபலமானது.ஆனால் வசூல் ரீதியாக படம் பரிதாபநிலையைத்தான் எட்டியது.

ஆனாலும் சற்றும் மனம் தளராமல் பார்ட்2’ இயக்கி முடித்து ரிலீஸுக்கும் தயாராகிவிட்டனர்.

முதல் பாகத்தை விட பார்ட்2’ மிகவும் சிறப்பாக வநதிருப்பதாகக் கூறும் இயக்குநர் செந்தில் வீராசாமி,அந்தப் பரவசத்தை முதல் அறிவிப்பிலேயே செய்து விட்டார். இவர் இயக்குனர் கௌதம் மேனனிடம்  பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.’ராஜ தந்திரம்’ 2’படத்தில் இருந்து ரசிகர்களின் ஆர்வத்தைக் கூட்ட ராஜ தந்திரம் முதல் பாகத்தில் நடித்த வீரா உட்படமூன்றுபேர் நடிக்கும் முக்கியக் காட்சியான ஒரு ஆறு நிமிட காட்சியை முன்னோட்டமாக  வெளியிட்டு உள்ளனர்.

‘ராஜ தந்திரம் 2 படம் முந்தைய படத்திலிருக்கும் சுவாரசியம் ஒன்றுக் கூட குறையாமல், நிறையசுவாரசியம் கூடித்தான் வெளி வரும்.எங்களுக்கு வலு சேர்க்க இசை ஜாம்பவான் இளைய ராஜா சார்இணைந்து  இருப்பது எங்களுக்கு மிகப் பெரிய பெருமை.இந்த வருடம்  வெளி வரும் என்பதையும் , தமிழ்ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு நிச்சயம் இருக்கும்  எனக் கூறினார்  செந்தில் வீராசாமி.

ஆறு நிமிடக் காட்சியின் லிங்க் இதோ…