‘நேரம்’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவரும் தொலைக்காட்சி தொடர்களில் பிரபல நடிகருமான சாய் பிரசாந்த் எதிர்பாராதவிதமாக தற்கொலை செய்துகொண்டார்.

இவரது பெற்றோர்கள் பெங்களூரில் உள்ள நிலையில், நேற்று மாலை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக இருந்த இவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இவரது நண்பர்கள் மற்றும் போலீசார் கதவை உடைத்து இவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு முன், தன்னுடைய வாழ்வில் தொடர்ந்து வரும் தீராத மனவுலைச்சலே தனது தற்கொலைக்கு காரணமென கடிதம் எழுதிவைத்துள்ளார் சாய்.

ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தாகிய இவர் நிரஞ்சனா என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இவரது தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்துவருகின்றனர். அவரது உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி கோடம்பாக்கத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சமீப சில ஆண்டுகளாக சின்னத்திரை இயக்குநர்களும் நட்சத்திரங்களும் தொடர்ந்து தற்கொலை செய்துவருவது மிகவும் அதிர்ச்சிகரமாக உள்ளது.

Related Images: