காதலிக்கு `ரெஸ்ட்` கொடுத்த `சர்வர்`சந்தானம்

தொடர்ந்து தனது மூன்று படங்களில் ஜோடியாக நடித்த ஆஸ்னா ஜவேரிக்கு ஓய்வு கொடுத்து தனது புதிய படமான `சர்வர் சுந்தரத்தில் மராத்தி நடிகையை இறக்குமதி செய்திருக்கிறார் காமெடியன் சந்தானம்.அவர் பெயர் வைபவி.

நாயகி வைபவி பற்றி அவர் கூறுகையில், “வைபவியை தமிழில் கதாநாயகியாக அறிமுகம் செய்வதில் நாங்கள் மிக பெருமை அடைகிறோம். மூன்று மாதங்களுக்கு மேலாக நாங்கள் கதாநாயகி தேடி வந்தோம். இந்தக் காத்திருப்புக்கு ஒரு அர்த்தம் இருந்தது இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்துக் கொண்டோம். அவர் பரதத்திலும், கதக் நடனத்திலும் தேர்ந்தவர். அழகும் திறமையும் ஒருங்கிணைந்து இருக்கும் பதுமையான வைபவி ஷண்டிலியா தமிழ் ரசிகர்களின் மனதை நிச்சயம் கவர்வார்,” என்றார் சந்தானம்.

ஆனால் ஆஸ்னா ஜவேரியுடன் தீவிர காதல் திருப்பதியில் வைத்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் என்பதாக வந்த செய்திகளுக்கு இதுவரை ஒருமுறை கூட அவர் மறுப்பு தெரிவித்ததில்லை. வீட்டுல ஒத்துக்கிட்டாங்களோ?