ரெமோ ஆகும் ர.மு.

வ.வா.சங்கம், ”ரஜினி முருகன்’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அது மாதிரியான படங்களாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

புதுமுக இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் ரெமோவும் அப்படியொரு படமாக வளருகிறது . கீர்த்தி சுரேஷ், சதீஷ்  உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான ஆர்.டி.ராஜா தனது 24 AM ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்து வருகிறார். பெயரிடப்படாமல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. சிவகார்த்திகேயனின் பிறந்த நாளன்று படத்தின் பெயர் ‘ரெமோ’ என அறிவிக்கப்பட்டது. சென்னை, விசாகப்பட்டினம் பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது.

இப்படத்தின் இசையமைப்பாளரான, நவீன ரெமோ அனிருத் ஒரே ஒரு பாடல் பணியை மட்டும் விரைவில் முடித்துக் கொடுக்க படத்தின் இசையை ஏப்ரலில் வெளியிடலாம் என்று படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் தமிழகமே தேர்தல் களத்தில் மூழ்கி இருப்பதால், ‘ரெமோ’ இசையை தேர்தல் முடிந்தவுடன் வெளியிடுவதே நல்லது என்று முடிவு செய்து மே மாத இறுதிக்கு ‘ரெமோ’ இசையை தள்ளி வைத்திருக்கிறார்கள்.