குதிரைக்கு வக்காலத்து வாங்கப்போய், பெரும் தர்மசங்கடத்தில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார் விலங்குகள் நல ஆர்வலர் த்ரிஷா,

உத்தரகாண்டில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ முசோரி கணேஷ் ஜோஷி தலைமையில் தலைநகர் டேராடூனில் பாஜகவினர் ஆர்பாட்டம் நடத்தினர்.

போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசின் குதிரைப்படை பிரிவு வந்திருந்தது. அப்போது, வெறி வந்தவர் போல காணப்பட்ட கணேஷ் ஜோஷி, உருட்டுக்கட்டையை எடுத்து, போலீஸ்காரர் அமர்ந்திருந்த குதிரையொன்றின் கால்களை கொடூரமாக  ஓங்கி அடித்தார். இந்த தாக்குதலில் குதிரை அப்படியே கீழே விழுந்தது. அதன் காலில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு, ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. இதையடுத்து போலீசார் லத்தி சார்ஜ் செய்து கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், விலங்குகள் நல ஆர்வலரான நடிகை திரிஷா, தனது கடும் கோபத்தை டிவிட் ஒன்றில் வெளிப்படுத்தினார். ‘குதிரையின் காலை ஒடித்தவர் நரகத்துக்குத்தான் செல்வார்’ என்கிற அர்த்தத்தில் ட்விட்டினார்.

இந்த ட்விட்டர் செய்தியால் சிலரின் பாராட்டுகளைச் சம்பாதித்து விடலாம் என்ற த்ரிஷாவின் கணக்கு இம்முறை ரிவர்சில் ஒர்க் அவுட் ஆனது.

தமிழ்நாட்டுல நடக்குற கவுரவக்கொலைகள் பற்றியோ மற்ற சமூக அநீதிகள் பற்றியோ எந்த அக்கறையும் கொள்ளாத கழுதை த்ரிஷா இனியாவது குதிரைக்கும் தெருநாய்க்கும் ஆதரவாக ட்விட்டரில் குரைப்பதை நிறுத்திக்கொள்ளவேண்டும் என பலத்த எதிர்ப்புக் குரல்கள் ட்விட்டர்களில் ஒலிக்க ஆரம்பித்துள்ளன,

Related Images: