லோனுக்குப் பதில் பிகினி பிள்ளைகளை அனுப்பலாமே மல்லையா?

ட்விட்டர் உலகின் ‘மொட்ட சிவா கெட்டா சிவா’ கண்டிப்பாக இயக்குநர் ராம்கோபால் வர்மாதான். வோட்காவும் கையுமாக அவர் ட்விட்டரில் விளையாட ஆரம்பித்துவிட்டாரென்றால், யாரை, எப்படி வேண்டுமானாலும் கலாய்ப்பார்.

லேட்டஸ்டாக அவரது கலாய்ப்புக்கு ஆளாகியிருப்பவர், ஜஸ்ட் லைக் தேட் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடி தனக்கு லோன் கொடுத்த வங்கிகளுக்கு நாமம் சாத்தியிருக்கும் கடன்கார விஜய மல்லையா.

‘விஜய் மல்லையா வங்கிகளில் லோனைத் திருப்பிக் கட்டுவதற்கு சிரமமாக இருப்பின், அவர் வங்கிகளில் கடன் வாங்கி எந்த காலண்டர் பெண்களுக்கு செலவழித்தாரோ, அவர்களையே தானமாகக்கொடுத்து கடனைக் கழிக்கலாமே’ என்று ஏதோ காலைக் கடனைக் கழிப்பதற்கு யோசனை சொல்வதுபோல் சொல்லியிருக்கிறார் வர்மா.

மல்லையாவின் காலண்டர் கேர்ள்ஸ் லிஸ்டில் இந்தித்திரையுலகின் பிரபல நட்சத்திரங்களான தீபிகா படுகோனே, ஈஸா குப்தா, காட்ரினா கைஃப் இருப்பதையும் ‘போட்டுக்கொடுத்திருக்கிறார் வர்மா.

வங்கிகளே இது உங்களுக்கு சரியா வருமா?