அசிங்கப்பட்டாண்டா ஆட்டோக்காரன் போல ‘சீனியர் சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் சினிமாப்பாடகரை அறிமுகம் போல ஊர் உலகுக்கு அறிவித்து தற்போது பெரும் கலாய்ப்புக்கு ஆளாகியுள்ள விஜய் டி.வி.நிர்வாகம், ஆச்சரியமாய், அதே சமயம் ஆத்திரமாய் ஒரு சப்பைக்கட்டு பதிலை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, விஜய் டிவியின், தலைமை நிகழ்ச்சி பொறுப்பாளர் பிரதீப் மில்ராய் பீட்டர் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’’இந்த முழு செய்தியையும் வெளியிட்ட நபர்கள், அந்த நிகழ்ச்சியை முழுவதுமாக பார்க்கவில்லை. அந்த நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்களுக்கு, அவர்  ஒரு பின்னணி பாடகர் என்பதும், அவர் எதையுமே மறைக்கவில்லை என்பதுவும் தெரியும்.

நீங்கள் நினைப்பதை போல் அல்லாமல், ஒரு பின்னணி பாடகர், இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாளராக வருகிறார் எனில், அது எங்களுக்கு பெருமை தானே ?

ஆரம்ப காலகட்டங்களில், நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் பின்னணி பாடகர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதியில்லை என கூறியிருந்தோம். ஆனால், நாங்கள் குரல் தேர்வு செய்யும் போது, நூற்றுக்கணக்கான மக்கள், தொழில் ரீதியாக, இயக்குநர்களாகவோ அல்லது பக்தி பாடல் ஆல்பங்களை வெளியிட்டவர்களாவோ இருந்தனர். எனவே இந்த விதிமுறையை நாங்கள் அகற்றினோம். சூப்பர் சிங்கர் சீனியரில் இரு சீசன்களுக்கு முன்னர் இந்த விதிமுறை அகற்றப்பட்டது. எனவே அந்த விதிமுறை தற்போது செல்லுபடியாகாது” என்றார்.

கூடவே ரூல்ஸ் எனப்படுபவை எப்போது தேவைப்பட்டாலும் மீறப்படுவதற்குத்தான் என்பதையும் சொல்லீட்டிங்கன்னா யுவர் ஆனர்…

 

Related Images: