மந்தி[ரி]யாகிறார் நடிகை விந்தியா

தனது பேச்சில் மேலும் மேலும் சுவாரசியத்தைக்கூட்டி, எதிர்க்கட்சியினரை வெறியேற்றும் விந்தியா, மீண்டும் அம்மா ஆட்சி அமைந்தால் மந்திரி ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று நம்பகமான வட்டாரங்கள் வெம்பி விசும்புகின்றன.

சமீபத்திய தனது மேடைப்பேச்சு ஒன்றில் இத்தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளுக்கும் படப்பெயர்கள் சூட்டி பலரையும் திகைக்கவைத்தார் விந்தியா.

அதிமுகவை ’சிங்கம்’ என்று சிலிர்க்கும் விந்தியா, திமுகவை ’சூது கவ்வும்’ என்றும், மக்கள் நலக்கூட்டணியை ’நானும் ரவுடிதான்’ என்று வர்ணித்துள்ளார். பாஜக அணியை’ ஜில் ஜங் ஜக்’ என்று தலைப்பிட்டுள்ள விந்தியா, பாட்டாளி மக்கள் கட்சியை ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்று பெயர் சூட்டியுள்ளார். மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக இணைந்த உடன் மக்கள் நலன் மாயமாகிவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார் விந்தியா.

இன்னொரு பக்கம் விஜயகாந்தை வெரைட்டியாக வருணித்து வரும் விந்தியா தன்னைத்தானே கிங்கு என்று அழைத்துக்கொள்ளும் கேப்டனுக்கு காத்திருக்கு சங்கு என்றும் செம நக்கல் அடித்துள்ளார்.

சரத்குமார் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டது, விமர்சகர்களையும் விருந்தினர்களாகப்பார்க்கும் அம்மாவின் பெரிய மனசுக்கு உதாரணம் என்று சர்டிபிகேட் வழங்கியுள்ளார். ஆக விந்தியா மந்திரியாகும் வேளை நெருங்குகிறது.