அமீர்க்கு நஷ்டம் கொடுத்தாரா விஜய் ?

மைம்ஸ் வெளியிடுவது போல ட்விட்டரிலும் போலிக் கணக்குகள் வைத்து போலிச் செய்திகள் வெளியிடுவார்கள் போலிருக்கிறது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தெறி படத்திற்கான மதுரை பகுதி விநியோக உரிமையை இயக்குநர் அமீர் வாங்கியிருக்கிறார் என்றும். படத்தின் ஓப்பனிங் சரியாகப் போகாததால் தனக்கு மிகப் பெரும் நஷ்டம் என நொந்த அமீர் ட்விட்டரில், “ தெறியின் மதுரை பகுதி விநியோக உரிமையை வாங்கினேன். ஆனால் தெறி படத்தால், 50% அளவிற்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது.  தயாரிப்பாளர் தாணுவுக்கு எதிராக போராட்டம் நடத்தவிருக்கிறேன்” என்று சொன்னதாக இயக்குனர் அமீர் என்ற பெயரில் இருக்கும் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.

ஆனால் அது தன்னுடைய சொந்தக் கணக்கே அல்ல. யாரோ தன்னைப் பிடிக்காதவர்கள் செய்திருக்கும் வேலை என்கிறார் இயக்குனர் அமீர்.

அந்த ட்விட்டர் பதிவிற்கு பதில் கடிதம் ஒன்றையும் அமீர் வெளியிட்டுள்ளார். அதில்,

“விஜய்யின் வளர்ச்சி பிடிக்காத சிலருடைய செயல்களால் தெறி படம் வெளிவருவதில் இருந்த சிக்கல்களையும், வெளியான நாள் முதல் வந்துகொண்டிருக்கக்கூடிய தவறான தகவல்களையும் நான் அறிவேன். அதே நேரத்தில் தெறி படத்திற்கான விநியோகம் குறித்து என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நான் ஒரு செய்தி பதிவிட்டிருப்பதாக இன்று காலை அறிந்தேன்.

எனக்கென்று அதிகாரப்பூர்வமான முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கம் நான் வைத்துக்கொள்ளவில்லை என்பதை கூறிக்கொள்கிறேன். என்னுடைய பெயரில் இருக்கும் முகநூல் பக்கமோ, ட்விட்டர் பக்கமோ என்னுடையது இல்லை. யாரோ சில தவறான எண்ணம் கொண்டவர்களால் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் தெர்வித்துக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார் அமீர்.

ஒரு வாரத்தில் இந்தட் ட்வீட்டுக்கு அர்த்தமேயில்லை என்பது போல தெறி வசூலித்து விட்டதால் பஞ்சாயத்து முடிந்தது சுபம்.