அமிதாப்பின் மருமகள் மீதான பாசம்.

வயது ஆனாலும் அமிதாப் பச்சன் இப்போதும் பிசியான  நடிகராகவே இருந்து வருகிறார். சமீபத்திய பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் இவர் பெயர் நாறினாலும் அரசு என்னவோ அவரை செல்லமாகவே கவனித்துக் கொள்கிறது.

மருமகள் ஐஸ்வர்யா ராயும் தற்போது மீண்டும் இந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அமிதாப்பச்சன் புதிதாக நடித்துள்ள  படம் ‘டிஇ3என்’ இந்த படத்தை வருகிற மே மாதம் 19–ந்தேதி திரையிட திட்டமிட்டு இருந்தனர். இது போல் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள ‘சரப்ஜித்’ படத்தையும் அதே தேதியில் ‘ரிலீஸ்’ செய்ய முடிவு செய்து இருந்திருக்கிறார்கள்.

இந்தப் படம் தனக்கு பெரிய பேர் வாங்கித் தரும் என்று ஐஸ்வர்யா ராய் மிகவும் எதிர்பார்க்கிறார். இதே நேரத்தில் தனது படமும் வெளியாவதால்  ஐஸ்வர்யா ராய் படத்துக்கு பாதிப்பு வந்துவிடுமோ என்று கருதிய அமிதாப் பச்சன்  தனது படத்தின் இயக்குனர் ரிபுதாஸ் குப்தா, தயாரிப்பாளர் கஜாய் கோஸ் ஆகியோரை சந்தித்துப் பேசி அதில் உள்ள மார்க்கெட் வசூல் பிரச்சனைகளையும் கலந்து பேசியதில் படத்தை தாமதாக வெளியிடலாம் என்று தயாரிப்பாளர் ஒத்துக் கொண்டாராம்.

எனவே ஐஸ்வர்யாவின் படம் முதலிலும், அமிதாப்பின் படம் மே 19க்குப் பின் வேறொரு நாளிலும் வெளியாகும்.