தமிழுக்குப் பெருமை சேர்ப்பதில் இளைய இசையமைப்பாளர்களுக்கு நிகர் அவர்களே.  சிம்புவோடு சேர்ந்து பீப் பாடலுக்கு இசையமைத்து அப்படி ஒரு புண்ணியத்தை புதிதாய் வாங்கிக் கட்டிய இளைய இசைப் புயல் அனிருத், சமீபத்தில் கியூபா சென்றாராம். அங்கு அவர் இசையைக் கேட்டு தெறித்து ஓடிய மக்களைத் தேடி அவர் அங்கே சுற்றித் திரிந்த போது தமிழுக்கு ஒரு புதிய வார்த்தையைக் கண்டுபிடித்து கொண்டு வந்திருக்கிறார்.

க்யூபா நாட்டில்  ஒருவருக்கு ஒருவர் சந்திக்கும் போது கூறும்  வார்த்தைதான் ‘ஹோலா அமிகோ’ என்பது. அந்தச் சொல்லை தமிழ்ப்படத்துக்கான பாடலொன்றில் பயன்படுத்தியிருக்கிறாராம் அனிருத். சாய்பரத் இயக்கத்தில், ஹிரிஷிகேஷ், சஞ்சிதா நடித்துள்ள ‘ரம்’ படத்துக்காக அனிருத் இசை அமைத்து உள்ள பாடல் ஒன்று ‘ ஹோலா அமிகோ’ என்ற  புரியாத வார்த்தையில் வருகிரது.

 தமிழ்ப்படப் பாடலில் இந்த அபூர்வ வார்த்தையைப் பயன்படுத்தக் காரணம் என்ன என்பது பற்றி அனிருத் விளக்கம் கொடுத்திருக்கிறார்.  ‘ நான் க்யூபாவில் இசை நிகழ்ச்சி நடத்தும் போது ‘ஹோலா’ என்ற இந்த வார்த்தையை தெருக்களில் மக்கள் சகஜமாக உபயோகிப்பதைக் கண்டேன். அந்த வார்த்தையின் அர்த்தமும் , அது கொடுக்கும் உற்சாகமும் அந்த வார்த்தையை என் பாடலில் உபயோகிக்க வைத்தது.’ என்கிறார் அனிருத்.
ஹோலா அமிகோ அனிருத் !! பீப் மாதிரி இதுக்கு அர்த்தம் க்யூப மொழியில் எதுவும் கெட்ட கிட்ட வார்த்தை எதுவும் இல்லையே ?!

Related Images: