நடிகைகள் மார்க்கெட்டில் ஹாட்டாக இருக்கும் போது சம்பாதிக்கும் பணத்தை வைத்து தங்களது எதிர்கால நலனுக்காக வேறு தொழில் தொடங்குவது சகஜம். பெரும்பாலும் ஈவண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம், ரியல் எஸ்டேட் நிறுவனம், ஆபரணக் கடைகள்,  பேஷன் கடைகள் என்று துவங்கி இருப்பார்கள். நடிகை த்ரிஷாவோ வித்தியாசமாக நடிகர்கள் பலர் செய்வது போல ஓட்டல் தொடங்க இருக்கிறார்.

அவரிடம் இது பற்றி கேட்டபோது,

“நான் ஒரு சாப்பாட்டு ராமி. பிடித்த உணவுகளை தேடி தேடிச் சென்று சாப்பிடுவேன். எந்த நாட்டுக்குச் சென்றாலும் அந்த நாட்டு ஸ்பெஷல் என்ன என்று கேட்டு தேடிச் சென்று சாப்பிடுவேன்.  ஒரு ஓட்டல் தொடங்க வேண்டும் என்கிற எண்ணம் நீண்ட நாட்களாகவே எனக்கு இருந்தது. அதற்கான முயற்சியில் தான் தற்போது இறங்கிருக்கிறேன்.

பணம் இருக்கிறது ஏதாவது ஒரு தொழில் செய்ய வேண்டும் என்பதற்காக இதனை செய்யவில்லை. உணவுகள் மீது இருக்கும் பிரியத்தின் காரணமாகவே இதனை தொடங்க இருக்கிறேன். இதற்காக ஓட்டல் நிர்வாகம் பற்றிய புத்தகங்களை படித்து வருகிறேன். விதவிதமான உணவுகளை சமைக்கவும் கற்று வருகிறேன். உலகின் பிரபலமான உணவுகள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்குமாறு செய்வேன்” என்கிறார் த்ரிஷா.

ஹோட்டல் பேர் என்னவா இருக்கும் ? த்ரிஷா இல்லைனா நயன்தாரா ?

Related Images: