மே மாதம் இருமுகன் டீஸர் ?

விஜய் மில்டனின் 10 எண்றதுக்குள்ள படம் ப்ளாப்பானதைத் தொடர்ந்து விக்ரம் நடித்து வரும் படம் இருமுகன். அரிமா நம்பி படத்தை இயக்கிய இயக்குனர் ஆனந்த் சங்கர் தனது இரு முகன் படத்தை விக்ரமை வைத்து இயக்கி வருகிறார்.

விஜய்யின் புலி படத்தைத் தயாரித்து பெரும் நஷ்டமடைந்த ஷிபு தமீன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறார்கள். அறிவியல் க்ரைம் த்ரில்லர் கதையாக உருவாகும் இப்படம் சூர்யாவின் 24 மாதிரியே இருக்குமா ? இல்லை வேறா ? என்று வேறு கோடம்பாக்கத்தில் குழம்புகிறார்களாம்.

இரு முகன் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக முதல்முறையாக நயன்தாரா நடித்துள்ளார். நித்யா மேனன் இன்னொரு கதாநாயகி. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். கடந்த டிசம்பரில் தொடங்கப்பட்டு சென்னை, லடாக், பேங்காக், மலேசியா, காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று தற்போது 50 சதவிகிதம் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாம். இந்த தகவலை ட்விட்டரில் தெரிவித்துள்ள இயக்குநர் ஆனந்த் சங்கர், ஒரு முகன் ஷூட்டிங் முடிந்தது. மற்றொரு முகனுக்கு விரைவில் படப்பிடிப்பு ஆரம்பம். அடுத்து… டீஸருக்கான நேரம்..? என ட்வீட்செய்துள்ளார்.

மே முதல் வாரத்தில் இருமுகன் படத்தின் டீஸர் வந்தாலும் வரும் என்கிறார்கள். ‘பாதி ஷூட்டிங்குக்கே இவ்வளவு நாடு போனவங்க மீதி ஷூட்டிங் எங்க போறாங்களோ?’ என்று ‘புலி’ தயாரிப்பாளர் கிலி பிடித்து உட்கார்ந்திருக்கிறாராம்.