ஹாலிவுட்டில் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பே ஜங்கிள் புக் 3டி அனிமேஷன் படத்தை இந்தியாவில் வெளியிட்டது வால்ட் டிஸ்னி. நேற்று வரை இப்படம் இந்தியாவில் சுமார் 142 கோடி ரூபாய் வசூலைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். எப்படியும் இன்னும் இரண்டு வாரங்களுக்கும் மேலாக இப்படம் இந்தியாவில் ஓடும் என்கிறார்கள்.

உலக அளவில் ஹாலிவுட் படங்களுக்கு சிறந்த மார்க்கெட்டாக சைனாவுக்கு அடுத்து இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.  அதனால், ஹாலிவுட் படத் தயாரிப்பாளர்களும், வினியோக நிறுவனங்களும் இந்தியாவில் இன்னும் பல இந்திய மொழிகளில் ஹாலிவுட் படங்களை டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். அமெரிக்கக்காரர்களுக்கு இந்தியா பணம் கொழிக்கும் நாடாக விளங்கி வருகிறது.

ருட்யார்ட் கெப்ளிங் எழுதிய ஜங்கிள் புக் நாவல் வட இந்தியாவிலுள்ள காடுகளில் மிருகங்களால் வளர்க்கப்பட்ட மோக்லி எனப்படும் சிறுவனைப் பற்றிய கதை.

இதற்கு முன்பு பாஸ்ட் அன்ட் ப்யூரியஸ் – 7 தான் 104 கோடி ரூபாய் வசூலித்து இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் படமாக இருந்தது. தற்போது ஜங்கிள் புக் அந்த இடத்திற்கு வந்திருக்கிறது. இப்போது புரிகிறதா சங்கர் ஏன் இந்தியா முழுவதும் மார்க்கெட் செய்யக்கூடிய வகையில் படங்களை தயாரிக்க நினைக்கிறார் என்பது ?

எல்லாம் பிஸினெஸ் சார் பிஸினெஸ்.

Related Images: