அனுஷ்காவின் சாமாதனத் தூதர் சல்மான்கான் !

கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் டேட்டிங் கீட்டிங் முடிந்து காதல் பிக்கப் ஆகி டாப் கியரில் போய்க்கொண்டிருந்தனர். கோலி விளையாடும் போட்டிகளில் எல்லாம் கலந்து கொள்ளும் அனுஷ்காவை டி.வி.க்காரர்கள் க்ளோஸப்களில் கவர் செய்தே கோலியின் கவனம் சிதைத்து அவுட் ஆக்கினர்.

சமீபத்தில் இவர்களது காதலிலும் விரிசல் ஏற்பட்டது. விரிசல் விழாத காதல் ஏதாவது உண்டா ? இருவரும் தனித்தனியாக பிரிந்தனர். காதலுக்கு வில்லனாக சல்மான் கான் வந்துவிட்டார் என குசுகுசுவெனப் பேசாத பேஸ்புக் இல்லை. குடித்துவிட்டுக் காரேத்திக் கொன்ற வழக்கில் சல்மான்கான் உத்தமராகியதும் வில்லன் ஹீரோவாக மாறிவிட்டாராம்.

கதையின் புதிய திருப்பமாக இப்போது மீண்டும் கோலி-அனுஷ்கா காதல் புத்துயிர் பெற்றுள்ளதாக தெரிகிறது. இருவரும் மும்பையில் உள்ள ஓட்டல் ஒன்றில் இரவு விருந்தில் கலந்து கொண்டுள்ளனர். அனுஷ்கா சர்மா கறுப்பு நிற உடையும், கோலி சாதாரண ஒரு டி-சர்ட் அணிந்த படி இரவு ஓட்டலில் இருந்து வெளியேறியுள்ளனர்.

தன்னால் பிரிந்த காதலை தானே சமாதானத்தூதராக முன்னின்று கோலி-அனுஷ்காவைச் சேர்த்து வைத்தவர் சாட்சாத் சல்மான்கானே தானாம்.

கோலி தனது அடுத்த ஐபிஎல் அரை சதத்தை சல்மானுக்கு டெடிகேட் செய்வார் பாருங்க.