’16 வயதினிலே’ ரிலீஸான மறுநாள் மத்தியானத்திலிருந்தே தனது லட்சியப்படம் என்று முழங்கி வந்த ‘குற்றப்பரம்பரை’ படத்தை ஒருவழியாக நேற்று துவங்கினார் பாரதிராசா.இதே தலைப்பில்  எழுத்தாளர் வேல.ராமமூர்த்தியின் கதையை தாரை தப்பட்டையர் பாலா இயக்கவிருந்த சூழலில் பாரதிராசா இப்படத்தை துவங்கியிருப்பதால் ‘குற்றப்பரம்பரை’ குறித்து ஒருவரை ஒருவர் திட்ர லெவல் முதல் வெட்ர லெவல் வரை எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலா சைலண்ட் மோடில் இருக்கும் நிலையில் பாரதிராசா அலுவலகத்திலிருந்து வந்த பத்திரிகைக் குறிப்பு இதோ…
குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து தன் உயிரை துச்சமென மதித்து, நிராயுதபாணியாக போராடிய மக்கள் மீது ஆங்கிலேயர் அரசு நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த தியாகிளின் போராட்டத்தை பேராசிரியர் இரத்தினகுமார் சேகரித்து வைத்திருந்த பதிவுகளை இயக்குனர் இமயம் பாரதிராஜா உணர்வுபூர்வமாகவும், உயீரோட்டமாகவும் இயக்கவுள்ளார்.
இப்படத்தின் பூஜை மற்றும் படத்தொடக்க விழா  இன்று காலை 10.30 மணிக்கு ( April 3 ) உசிலம்பட்டி அருகிலுள்ள பெருங்காமநல்லூர் என்ற இடத்தில் விமர்சையாக நடைபெறுகின்றது.
இயக்குனர்கள் லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், சுசிந்திரன், பாண்டிய ராஜன், பொன்ராம், எழில், SS ஸ்டான்லி, சரவண சுப்பையா, மகிழ் திருமேனி, ஒளிப்பதிவாளர் கண்ணன், பாடலாசிரியர்கள் நா.முத்துகுமார், கபிலன் வைரமுத்து உள்ளிட்ட பல பிரபலங்கள் இவ்விழாவில் கலந்து கொள்கின்றனர்.
இப்படத்தின் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
பி.கு: போட்டோசெஷனின் போது பாரதிராசாவுக்கு கோப எக்ஸ்பிர்சன் துவக்கத்தில் சரியாக வரவில்லையாம். பின்னர் ரத்னகுமாரின் யோசனைப்பட பா.ராவுக்கு எதிரில் ஆளுயர பாலா படம் கொண்டுவந்து வைக்கப்பட கோபம் கொப்பளிக்க இப்படி போஸ் கொடுத்தாராம்.
0ed47946-86f5-412e-ad24-dc468e31c8e4

Related Images: