கெட்ட கொலஸ்டிரால் எனப்படும் LDL உடம்புக்கு கெடுதலா ? இல்லை… உண்மை அதற்கு எதிரானது.

டாக்டர்களுக்கும் மக்களுக்கும் ஒரு திறந்த கடிதம் – By Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry),

டாக்டர்களாகிய எங்களுக்கு LDL கொலஸ்டிரால் கெட்ட கொலஸ்டிரால் என்றும், அது இதய வியாதியை கொண்டு வருகிறது என்றும் கற்ப்பிக்கப் பட்டது. இல்லை, LDL கெட்ட கொலஸ்டிரால் கிடையாது. பல இதய நிபுணர்களால் பெரிதும் மதிக்கப் படும், உலகிலேயே மிகப் பெரிய ஆராய்ச்சியான ஃபிராமிங்காம் இதய ஸ்டடி, “உணவில் கொலஸ்டிரால் மிகுந்திருக்கும் முட்டை மஞ்சள் மற்றும் பிற உணவுகளுக்கும், இதய ரத்தக்குழாய் அடைப்பிற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை” என நிருபித்திருக்கிறார்கள்.

நான் ஒரு கேள்வி கேட்கிறேன். LDL கெட்ட கொலஸ்டிரால் என்றால், அது ஏன் நம் உடலில் தயாரிக்கப் படுகிறது? உடலுக்கு தீங்கான பல கெமிக்கல்களை ஈரலும், கிட்னியும் உடலை விட்டு வெளியேற்றும் போது, ஏன் LDL மட்டும் ஏன் வெளியேற்றப்படவில்லை? பதில் ரொம்ப சிம்பிள். LDL கெடுதல் கிடையாது, அதனால் வெளியேற்றப்படவில்லை.
உலக நாடுகளில் செய்யப்பட்ட சில ஆராய்ச்சிகளின் முடிவுகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

1. ஒருவருக்கு LDL அதிகமானால் ஹார்ட் அட்டாக் வருவதில்லை. இதய குழாய்களில் கொழுப்பு படியும் போது கொஞ்சம் கால்சியமும் படியும். அந்த கால்சியத்தை அளக்க ஒரு டெஸ்ட் உள்ளது. LDL அதிகமாக இருந்தவருக்கு இதய ரத்தக் குழாய் கால்சியம் கம்மியாக இருந்திருக்கிறது. அதாவது LDLலுக்கும் ஹார்ட் அட்டாக்குக்கும் சம்பந்தம் இல்லை.

2. இன்னொரு ஆராய்ச்சியில், அதிக அளவு LDL இருந்தவர்களுக்கு இதய வியாதி வருவது குறைந்துள்ளது என கண்டார்கள்…. என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? இது தான் உண்மை. அதே ஸ்டடியில் LDLலை குறைத்தால் இதயக் குழாயில் அதிக கொழுப்பு படிவதையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். அது ஹார்ட் அட்டாக்கை வரவழைக்கிறது. LDL ஒன்றும் கெட்ட கொலஸ்டிரால் கிடையாது. அது கம்மியானால் மாரடைப்பு வரும்

3. இன்னொரு ஸடடியில் அதிக அளவிலான total cholesterol இதயத்தை காப்பதாக கண்டிருக்கிறார்கள். உங்களில் பலருக்கு total cholesterol அதிகம் இருக்கும். அதைக் கண்டு பதற வேண்டாம். இந்த மூன்று ஆராய்ச்சிகளின் லிங்க் என் டைம்லைனில் இதன் ஆங்கில வடிவில் உள்ளது. போய்ப் படிக்கவும்.

ஸ்டாடின் மாத்திரைகளின் வரலாறை கொஞ்சம் அறிவோம். உலகிலேயே அதிகமாக லாபி செய்யப்பட்ட மருந்து ஸ்டாடின்கள் (Atorvastatin, Rosuvastatin). பலவிதமான ஆராய்ச்சிகள் செய்து அவை நல்லது டாக்டர்களை நம்ப வைத்திருக்கின்றனர். இப்போது பல ஆராய்ச்சியாளர்கள் அந்த பழைய ஆராய்ச்சிகளை துருவி, அதெல்லாம் பொய் என நிருபித்து வருகின்றனர்.

LDLலை குறைக்கும் மருந்துகளான ஸ்டாடின்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதை எலிகளில் ஆராயும் போது கொலஸ்டிரால் அளவு கம்மியாகி இருக்கிறது. ஆனால் எலிகள் சீக்கிரம் செத்து விட்டன. அந்த ஆராய்ச்சியாளர்கள் ஸ்டேடின் மனிதர்களுக்கு கொடுக்கக் கூடாது என அறிவுரை செய்தார்கள். கொலஸ்டிரால் மேனியா அதிகம் இருந்த அந்த கால அமெரிக்காவில், எதைத் தின்னால் பித்தம் போகும் என இருந்தனர். FDA அதிகம் யோசிக்காமல் ஸ்டாடினை அப்ரூவ் செய்தது. ஸ்டாடின் ஒரு வரலாற்று மோசடி. இதைப் பற்றி இணையத்தில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. தேடிப் படியுங்கள். இதை நான் சொல்வதால், ஸ்டேடின் மாபியாக்கள் என்னை குறி வைக்கலாம். ஸ்டாடினை இல்லாமல் ஆக்குவோம்.

முகநூலில் மருத்துவர் ஹரிஹரன்

Related Images: