‘மனிதன்’ படத்துக்கு வரிச்சலுகை இல்லை !!

‘மனிதன்’ என்பது தமிழ் வார்த்தை அல்ல என்று கூறி, வரிச்சலுகை அதிகாரிகள் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்திருக்கும் ‘மனிதன்’ படத்திற்கு வரிச்சலுகையை மறுத்திருக்கிறார்கள். அஹ்மத் இயக்கி இருக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஆனால்  ‘மனிதன்’ படத்தை பார்த்த வரிச்சலுகைக் குழு, இப்படத்திற்கு வரிச்சலுகை கொடுக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்திருக்கிறது. ஏன் என்று விசாரித்த போது ‘மனிதன்’ என்ற வார்த்தை தமிழ் வார்த்தை அல்ல. சமஸ்கிருத வார்த்தை என்று தெரிவித்திருக்கிறது. மேலும், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் சில காட்சிகள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில், வரிச்சலுகை குழுவின் இந்த முடிவை எதிர்த்து, திங்கட்கிழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போகிறாராம் ரெட்ஜயன்ட். ஏற்கனவே இவரது முந்தைய படங்களுக்கும் இதே பஞ்சாயத்து நடந்து கோர்ட்டுகளில் வழக்குகள் நின்றுகொண்டிருக்கின்றன.

படத்திற்கு வரிச்சலுகையில்லாவிட்டால் உதயநிதி அடுத்த நாளே நடுத்தெருவிற்கு வந்து விடுவார் இல்லையா, அதனால் தான் அவரும் கேஸ் போட்டுப் பாத்துடுறேன் ஒரு கை என்று இறங்கியிருக்கிறாராம்.

நல்ல மனிதங்க.