ரஜினி தற்போது நடித்து வரும் கபாலி படத்தில் ரஜினியின் ஜோடியாக நடித்து வருபவர் ராதிகா ஆப்தே. அப்படி வடக்கில் சோனாக்ஷி சின்ஹா துவங்கி எமி ஜாக்சன் வரை ரஜனிக்கு ஜோடித் தேடல்கள் நீளும்.

பலருக்கும் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பது கனவாகவே இருந்து வரும் நிலையில், சந்திரமுகி  மற்றும் குசேலன்  படங்களில் ரஜினியுடன் நடித்துவிட்டவர் நயன்தாரா.

தற்போது மலையாளத்தில் மம்மூட்டியுடன் நயன்தாரா  இணைந்து நடித்து பெரிய ஹிட்டான, பாஸ்கர் தி ராஸ்கல் என்ற படத்தை தமிழில் ரஜினியை வைத்து ரீ – மேக் செய்ய, முயற்சித்து வருகிறார், அப்படத்தின் மலையாள இயக்குனர் சித்திக். அப்படி, ஒருவேளை ரஜினி கால்ஷீட் கொடுத்து விட்டால், அப்படத்திலும், நயன்தாரா தான் கதாநாயகி என்று இயக்குனர் முடிவு செய்துள்ளாராம்.

எனவே வம்புத் தம்பிகள் இனி காதல் தொல்லைகள் எதுவும் நயனுக்குத் தந்தால் அப்புறம் நயன்தாராவிற்காக ரோடு பிளக்கும், ரயில்கள் நிற்கும், பஸ்கள் கதறும். நாடே தீப்பிழம்பாக மாறும். பாத்துக்கோங்க.

Related Images: