காமத்திலிருந்து கடவுளுக்கு செல்லும் சன்னி லியோன்

ட்ரிப்பிள் எக்ஸ் ஆபாச படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த இந்திய வம்சாவளியைச் சார்ந்த சன்னி லியோன் பாலிவுட்டில் ஒரு படத்தில் நடிக்க ஆரம்பித்து இப்போது கவர்ச்சி ஹீரோயினாகிவிட்டார். அவரது வருகையை ஆரம்பத்தில் எதிர்த்த ஹீரோ, ஹீரோயின்கள் தற்போது ஆதரவாக குரல் கொடுக்கின்றனர்.

சன்னி லியோனுடன் இணைந்து நடிக்கத் தயார் என ஆமிர்கானே கூறியாக வேண்டிய அளவுக்கு அமீர்கான் மார்க்கெட் டல்லடிக்க ஆரம்பித்துவிட்டது என்றால் பாருங்களேன். . சன்னி லியோனுக்கு பாலிவுட் ஸ்டார்களிடம் பெருகி வரும் ஆதரவை கண்டு ஷாக் ஆன கவர்ச்சி நடிகை ராக்கி சாவன்த், ‘கவர்ச்சி நடிகைகளுடன் நடிக்க மறுக்கும் ஆமிர்கான் ஆபாச நடிகை சன்னியுடன் மட்டும் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார். இது என்ன நியாயம்?’. ஆமிர்கான் என்னுடன் ஜோடியாக நடிக்க ஆபாச நடிகையாக மாற வேண்டும் என்றால் நானும் அதற்கு தயாரக உள்ளேன்’ என ஆவேசமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கிடையில் ‘மஸ்திஸாதே’ படத்தில் நடித்துள்ள சன்னி லியோன் மற்றும் ஹீரோ வீர் தாஸின்  மீது மும்பை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. கோயிலில் நின்றபடி ஆணுறை பற்றி ஆபாசமான காமெடி வசனம் பேசியதாக அவர் மீது புகார் கூறப்பட்டிருக்கிறது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு  செய்துள்ளனர்.

காமத்திலிருந்து கடவுளை அடையும் உன்னதக் கலையை ரஜ்னீஷ்  விட்டு விட்டுச் சென்றாலும் நம் சன்னி லியோன் கோயில் முன் நின்று பேசி அந்தப் புனித கடமையை தொடர்ந்து ஆற்ற முயற்சிக்கிறார்.

ஆன்மீக அன்பர்களே ! தயவு செய்து அவரைத் தடுக்காதீர்கள்.