‘பீப் சாங்’கில் விட்டதை ‘வோட் சாங்’கில் பிடிக்க நினைக்கும் சிம்பு..

அனிருத் மற்றும் சிம்புவின் பீப் பாடல் வெளியாகி உலகப் பிரசித்தி பெற்றது நாமெல்லாம் அறிந்ததே. அதில் மகளிர் அமைப்புகள் கண்களில் படாமல் தலைமறைவாகவே இருந்தனர் சிம்புவும், அனிருத்தும்.

முள்ளை முள்ளால் தான் எடுக்கவேண்டும் என்பது போல பாட்டில் விட்ட மரியாதையை பாட்டிலேயே பெறலாம் என்று நினைத்தோ என்னவோ சிம்பு தேர்தலையொட்டி தேர்தல் கமிஷனுக்காக காசில்லாமலேயே ஒரு விளம்பரப்பாடல் பாடிக் கொடுத்தது போல வந்திருக்கிறது இந்தப் பாட்டு.

போடுங்கம்மா ஓட்டு, ஓட்டு போட்டா கள்ள ஓட்டை தவிர்க்கலாம். உன் ஓட்டு உலக முக்கியத்துவம் வாய்ந்தது என்று இத்துப் போன தேர்தல் கமிஷனின்  தத்துவங்களை வி.டி.வி கணேஷூடன் இணைந்து பாடி வைத்திருக்கிறார் சிம்பு. பீப் பாடல் போல பேமஸாகாவிட்டாலும் தேர்தல் நேரத்தில் தானும் ஒரு பொறுப்புள்ள இளைஞன் என்கிற கெட்டப்புக்குள் வந்துவிடும் ஆர்வம் தெரிகிறது சிம்புவின் பாட்டில்.

சிம்புவை விடப் பல வயசு சிறிய கண்ணையா குமார் என்கிற டெல்லிப் பல்கலைக்கழக மாணவன் மோடிக்கே சவால்விடும் அரசியல் பேச்சுக்கள் பேசுகிறான். சிம்புவோ ஓட்டுப் போடுங்கள் என்று ஜால்ரா தட்டுகிறார். இசையமைப்பு யார் என்று போடவேயில்லை. ஒருவேளை அனிருத் ரகசிய இசை அமைத்து விட்டு எஸ்கேப்பாகிவிட்டாரோ ? தெரியவில்லை.

இதோ அந்த இசைக் காவியத்தை நீங்களும் கேட்டு ரசியுங்கள்..