வருகிறது பன்னாட்டுக் கல்வி பிஸ்னெஸ்! !

உலக தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் பிங்க் ஆட்ஸ்  இணைந்து பன்னாட்டு கல்வி கண்காட்சியை வரும் மே 28 மற்றும் 29ஆம் தேதிகளில் சென்னை வர்த்தக மையம் , நந்தம்பாக்கத்தில்  நடத்தவுள்ளார்கள். இந்நிகழ்வை மேதகு தமிழக ஆளுநர் துவக்கி வைக்க இசைந்துள்ளார் இந்நிகழ்வில் முன்னணி உள்நாட்டு வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள்  பங்கு பெற உள்ளன.

கல்வி கற்பது உரிமை. கல்வியை இலவசமாக மக்களுக்குத் தரவேண்டியது அரசின் கடமை என்று எல்லோரும் போராட ரெடியாகிக் கொண்டிருக்கும் வேளையில் மக்களை மெட்ரிக் கல்வி, சிபிஎஸ்ஈ மத்திய அரசுக் கல்வி என்று ஏமாற்றிப் பணம் பறித்த கல்வி நிறுவனங்கள் அடுத்து எடுத்திருக்கும் ஆயுதம் பன்னாட்டுத் தரக் கல்வி. அதற்கென வர இருக்கிறது இந்தக் கல்விக் கண்காட்சி.

இக்கல்வி கண்காட்சியில் என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் கல்வி கட்டணம் எவ்வளவு எனவும் பத்தாம் வகுப்பு படித்து முடித்து ஒரு வருடம் பவுண்டேஷன் கோஸ் முடித்து விட்டு நேரடியாக இளங்கலை படிப்பு மற்றும் முதுகலை படிப்பு படிக்க நேரத்தையும் கல்வி கட்டணத்தையும் மிச்சம் செய்ய மலேசியா கல்வி நிறுவனங்கள் அரங்கம் அமைக்க உள்ளன.

பன்னாட்டு கல்வி கண்காட்சியில் கலந்து கொண்டு அயல் நாட்டு பல்கலை கழகத்தில் படித்தால் அமெரிக்கா ஆஸ்திரேலியா, ஐரோப்பா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் குடியுரிமை கிடைக்க வாய்ப்பு உள்ளது. உயர் கல்வி பயிலும் போது பகுதி நேர ஊழியராக வேலை செய்ய முடியும். இப்படியெல்லாம் அயல்நாட்டு சம்பாத்தியம், செட்டில்மண்ட் கனவுகளை உசுப்பேத்தி விடுகின்றன இக்கண்காட்சியின் அயல்நாட்டு கல்வி நிறுவனங்கள்.

படிக்கும் போதே படிப்பதற்குக் கடன் என்கிற பெயரில் அவனுடைய மலையளவுச் சுமையான  பீஸ் மற்ரும் செலவுகளைக் கட்ட வங்கிக் கடன் உதவி அளித்து மாணவனைக் கடனாளியாகவே ஆரம்பிக்க வைப்பது தான் நவீன ட்ரெண்ட்.

இந்தக் கண்காட்சிக்காக உலக தமிழ் வர்த்தக சங்கம் இணையதளமும் வைத்துள்ளது. கல்வி உதவி தொகை மற்றும் சலுகைகள் பற்றி அறிந்துகொள்ள www.internationaleducationfair.org  என்ற  அகப்பக்கத்தில் பதிவு செய்யுங்கள். மேலும் விவரங்களுக்கு 9092475000 | edufair16@gmail.com