கேஸை முடிச்சாச்சி. இனி கல்யாணத்தை முடிக்கிறார் சல்மான்கான்

குடித்துவிட்டு நாலு பேரை கார் ஏற்றிக் கொன்ற வழக்கில் கைதான சல்மான்கான் எல்லா சாட்சிகளையும் கொஞ்சம் கொஞ்சமாக அதே காரில் ஏற்றிக் கொன்று விட்டு வெற்றிகரமாய் நிரபராதியென சமீபத்தில் விடுதலையானார். அடுத்த திட்டமாக கல்யாணம் என்னும் காரில் ஏறிப் போக இருக்கிறார் சல்மான்.

கடந்த 20 ஆண்டுகளில் இதுவரை தன்னுடன் நடித்த ஐஸ்வர்யாராய், சங்கீதா பிஸ்லானி, சினேகா உள்ளல், கத்ரினாகைப், சோமி அலி  உட்பட 8 நடிகைகளுடன்  இணைத்து கிசுகிசுக்கப்பட்ட  சல்மான்கான், சமீப காலமாக தனது  யூத் குறையாத 50 வயதிலும்  இத்தாலியை சேர்ந்த மாடல் அழகி லூலியாவுடன் இத்தாலியில் பிக் அப் ஆகியிருக்கிறார்.

சல்மான்கான் பிறந்த நாள் விழா விருந்தில் லூலியா கலந்து கொண்டு அவர்களுடைய காதலை கன்பர்ம் செய்தார். தற்போது சல்மான்கானுக்கும் லூலியாவுக்கும் திருமண ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் ஓரிரு மாதத்தில்  திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.

அதுக்குள்ளே வேற யாரையாவது பிக் பண்ணிடாம இருப்பாரா சல்மான்கான்?