சத்தா வித்தா ராஜபக்சே பலங்கா பத்திரா அம்பகுமரகே ரஞ்சன் லியோ சில்வஸ்டர் அல்போன்சு ரஞ்சன் ராமநாயகே.  இவர் யார் தெரிகிறதா ?

இலங்கையின் சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர்.

47 உள்ள ரணில் விக்கிரமசிங்கே அமைச்சரவையில் சமூக நலத்துறை துணை அமைச்சராக இருக்கிறார். ராஜபக்சேவுக்கு தூரத்து உறவு. இலங்கையில் ரத்தக் களரி வந்து மக்கள் செத்த போது இவர்களெல்லாம் வெறிக் குரலெடுத்து ஆரவாரமிட்ட லிஸ்ட்டில் இருப்பவர்கள்.

இந்த ரஞ்சன் ராமநாயகே சென்னைக்கு வந்திருந்தார். ராஜபக்சேவின் பினாமி சுபாஷ்கரன் பணத்தில் படமெடுக்கும் சங்கரையும், அதே பினாமி நிறுவனம் லைக்காவில் படமெடுக்கும்  ரஜினியையும், படமெடுத்த கமலையும் சந்தித்துப் பேசினார்.

இது அரசியல் எல்லாம் இல்லை. சும்மா நலம் விசாரிக்க என்று சொல்லி அவர் செல்பி எடுத்ததை பெரிதாகப் பத்திரிக்கைகள் போட்டிருக்கின்றன. எப்படி? ‘தமிழ் சூப்பர் ஸ்டாருடன் சிங்கள சூப்பர் ஸ்டார்’ இந்த ரேஞ்சில். இதை தனது பேஸ் புக் பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளாராம்.

ரஜினி, கமல், ஷங்கர் போன்றவர்களை அவர் சந்தித்தது அடுத்து விரைவில் இலங்கையில் நடக்கவிருக்கும் ஏதோ சினிமா விழாவுக்கு அழைக்கவாக இருக்கும் என்கிறார்கள்.

 நாய் வித்த காசு குரைக்காது என்று ரஜினி சார், கமல் சார், சங்கர் சாருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. எனவே லைக்காவின் பணத்தில் எந்த ரத்தக் கரையையும் அவர்கள் பார்க்கவில்லை.
அதனாலே நீங்களும் செல்பியை பார்த்துட்டு சந்தோசமா இருங்க.

Related Images: