தமிழக தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில், இந்த தேர்தலிலும் தேரை இழுத்து தெருவில் விடும் கதையாக விஜய் அங்க வாரார்.. இங்க பேசுறார்.. அவங்களுக்கு ஆதரவு..இல்லை இவங்களுக்கு… என்று சினிமா கிசுகிசுக்களை விட விஷயம் சூடுபிடிக்க, விஜய்யோ அமைதியாக அவருடைய படப்பிடிப்பில் கவனம் செலுத்திக் கொண்டிருப்பார்.

இந்தத் தேர்தலில் விஜய்யிடம் தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் பேசிவிட்டார். ஆகையால் அனைவருமே விஜய் ரசிகர்கள் அனைவரும் திமுகவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று விஜய் அவருடைய நற்பணி இயக்கத்தினரை கேட்டுக் கொண்டதாக புரளியை யாரோ கிளப்பி விட, திமுககாரர்களான சில விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் திமுகவுக்கு விஜய் ஆதரவு என்று செய்திகளை பரப்ப ஆரம்பித்துவிட்டார்கள்.

விஷயம் பிரச்சனையைக் கிளப்பி விடக்கூடும் என யோசித்த விஜய் ஸ்ட்ரிக்டாக ரசிகர் மன்றங்களுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துவிட்டாராம்.  “தலைவர் எங்களிடம் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு அளிக்க சொல்லவில்லை. தேர்தலில் எனது பெயர், புகைப்படம், நற்பணி இயக்கத்தின் கொடி ஆகியவற்றை உபயோகப்படுத்தாமல் உங்களுடைய விருப்பப்படி யாருக்கு வேண்டுமோ வாக்களியுங்கள். ஆனால் பெயரோ, புகைப்படமோ, கொடியோ தவறாக உபயோகிக்கும் நற்பணி இயக்க உறுப்பினர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

எனவே  ரசிகர்கள் அவர்களது விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம். ஆனால் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்பது அவர் வேண்டுகோள்.

தற்போது பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இருக்கிறது. அதற்காக சென்னையில் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்கில் அப்படத்தின் முதல் பாடலுக்காக தினேஷின் நடன அசைவில் ஆடிக் கொண்டிருக்கிறார் விஜய்.

Related Images: