‘பெல்பிக்ரே’யில் யோகா முத்திரை

படத்தில் காண்பது வாணி கபூரும், ரன்வீர் சிங்கும் லிப் லாக் எனப்படும் யோகாசன நிலையில் இருக்கும்போது எடுத்த புகைப்படமாகும். சர்வதேச யோகா தினத்தையொட்டி இது நிகழ்த்தப்பட்டது என்று சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள் ?

 பெல்பிக்ரே என்ப்படும் 23 முத்தக் காட்சிகள் உள்ள இந்திப் படத்தின் போஸ்டர் தான் இதுவாம். நம் ஊரில் எல்லாம் முத்தக்காட்சிகள் அரை செகண்ட்டில் முடிந்து  விடும். பலசமயம் சென்சார் மட்டுமே பார்த்துக்கொள்ள கட் செய்து வைத்துக் கொள்வார்கள்.
ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் ரன்வீர் சிங் மற்றும் வாணி கபூர் இணைந்து நடிக்கும் இந்த பெபிக்ரே படம் ரொமாண்டிக் படமாக உருவாகி வருகிறது.  ரன்வீர் கபூரின் தற்போதைய காதலியான தீபிகா படுகோனேயிடம் “இந்தக் கண்றாவி பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க ?” என்று குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்த கேள்வி கேட்டால் , “கதைக்கு முக்கியம் என்றால் லிப் லாக் முத்தக் காட்சியில் நடிக்க வேண்டும். அப்படி நடித்தால் தான் படம் சிறப்பாக அமையும். இப்படத்தில் கதைக்கு ஏற்றாற்போல் அவர்கள் முத்தக் காட்சியில் இணைந்து நடித்துள்ளனர். இதில் எனக்கு எந்தவித பிரச்னையும் இல்லை” என்கிறார் தீபிகா படுகோனே.
நாடு ரொம்ப முன்னேறிடுச்சுங்கன்னு சொன்னா நம்புங்க சார்.