இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் சென்னை28 படத்தின் இரண்டாம் பாக கிளைமாக்ஸ் காட்சிக்காக, தனது ஐந்து நண்பர்களை களம் இறக்கியுள்ளாராம்.

வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனர்களாகிய  ‘நளனும் நந்தினியும்’ புகழ் வெங்கடேஷ் ராமகிருஷ்ணா, ‘வடக்கறி’புகழ் சரவணா ராஜன், ‘கனிமொழி’ புகழ் ஸ்ரீபதி, ‘நவீன சரஸ்வதி சபதம்’ புகழ் சந்துரு ஆகிய நால்வரோடு ‘காவல்’படத்தின் இயக்குனரும், வெங்கட் பிரபுவின் நண்பருமான நாகேந்திரன் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

சென்னை 28 முதல் பாகத்தில் கல்லூரி மாணவர்களாக அறிமுகமான ஜெய் முதல் பிரேம்ஜி வரை எல்லோரும் வயதாகி விட்டாலும்,  முதல் பாகத்தில் நடித்த அனைத்து நடிகர்களும், இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். நட்பை மையப்படுத்தி உருவாகும்  இந்தப் பாகம் 2 க்கும் யுவன்ஷங்கர் ராஜாவே இசையமைக்கிறார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக ஒரு பிரம்மாண்ட அரங்கத்தை சென்னை 28 – II படக்குழுவினர் செட் போட்டிருக்கிறார்களாம்.

தொடர்ந்து தோல்விப் படங்களைத் தந்த வெங்கட் பிரபு இம்முறையாவது கவர்ச்சி, மசாலாக்களை நம்பாமல் நல்லதொரு கதையை நம்பி படம் எடுப்பார் என்று நம்புவோம்.

Related Images: