ஆமாம் மக்களே.. அதே தான். நானும் ‘இறைவி’ ய விமர்சனம் பண்ண போறேன்.

Mr .கார்த்திக் சுப்புராஜ், நீங்க ஒரு ஆஆஆண் நெடில். நீங்க எப்படி சார் இப்படி ஒரு படம் எடுக்கலாம்? இதெல்லாம் ஆம்பள வர்க்கத்துக்கே இழுக்கு இல்லையா… ச்சை… நீங்க எல்லாம் ஆம்பளையா பொறந்தோம்னு வெளிய சொல்லிக்காதீங்க. எங்க மானமும் போகுது.

சாதாரணமான ஆண் நெடிலா இருந்தா , இப்படி தான் பேசணும். நா அந்த நெடில் எல்லாம் இல்ல மக்களே.. நா எப்பவும் நெடிலும் இல்ல, குறிலும் இல்ல ஆண் மிடில் தான்.

சரி அப்படி என்ன இந்த படம் மோசம்னு ஒரு பேமஸ் எழுத்தாளரு மலக்குழிகுள்ள இருந்து எழுந்து வந்ததா பில்டப்பு எல்லாம் கொடுதிருகாறு. அதுல பாருங்க, ஆரமிச்ச 10 நிமிசத்துலையே எழுந்து போகலாம்னு இருந்தாராம். வெளிச்சம் இல்லாம எங்கயாவது விழுந்துடுவோம்னு இடைவேளையில வெளிச்சத்துல எழுந்து போனாராம். ஆண்ராய்டு போன் தானே நீங்க வெச்சிருக்கது..?? டார்ச் ஆப் இருக்குமே, அத போட்டா பளீர்ன்னு வெளிச்சம் வந்திருக்குமே எழுந்து போயிட்டே இருந்திருக்கலாமே. உங்கள யார் சார் உட்காந்து பார்க்க சொன்னா..

சரி அவர விடுவோம். அப்படி என்னதான்யா படம்.?

3 + 1 தருதல ஆம்பள நெடில்களை பத்தின படம். அந்த +1 ஐ என் தனியா போட்டேன்னா, அந்த ஆம்பள, என்ன என்னவெல்லாம் பண்ணினான்னு காட்டல. ஆனா அந்த ஆம்பளையோட, குறில் அந்த மழை துளிய ஜன்னல் வழியா தொடுறதுலையே அவங்க நிறைய இழந்திருக்காங்கன்னு தெரியுது. ஆனா படம் முழுக்க அந்த +1 நெடில், குற்ற உணர்ச்சியோட தன்னோட குறில பார்த்துகிட்டதால எதோ பாவமன்னிப்பு கொடுத்து விட்டுடலாம்.

ஆனா இந்த திமிர் பிடிச்ச மிச்ச 3 ஆம்பள நெடில் இருக்கானுகளே.. அய்யய்யையையோ .. எமகாதக பயலுக.. ஒருத்தன் என்னடான்னா, ஆம்பள எப்படி இருந்தாலும் பரவா இல்ல, தம்பொண்டாட்டியோட சேர்த்து தன்ன வெச்சிக்கிட்டவளும் கற்புள்ள வளாவே இருக்கணும்னு நினைக்கிது. இன்னொன்னு , ஒரு பொண்ணோட விருப்பத்துக்கு மாறா, அவல தன்னால மட்டுமே சந்தோசமா வெச்சிக்க முடியும்னு நினச்சி, அதோட வாழ்கையவே தன்னோட சுயநல இச்சைகளுக்காக அழிக்க பிளான் போடுது. இன்னொரு தருதல, ஒரு சாதாரண நெடில் ஆம்பள தான். பொண்டாட்டி புள்ளன்னு இருந்தாலும், கோபம் னு வந்துட்டா, நான் ஆம்பளைன்னு காட்டி, குடிச்சாதான் தனக்கு நிம்மதின்னு குடும்ப நிம்மதியா குலைக்கிது.

இதுகளுக்கு மத்தியில 4 குறில். ரொம்ப அற்புதமான பாத்திர படைப்புன்னு தான் சொல்லணும். அதிலயும், தம் பொண்டாட்டி கற்புள்ளவளா இருக்கணும்னு நினைகிறவனோட குறில் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அப்பறம் அந்த பொண்ணு Lets fcuk . அனேகமா அதுல தான் அந்த முற்போக்கு எழுத்தாளன் காண்டாகிருப்பாருன்னு நினைக்கிறன். அந்த பொண்ணோட பாத்திர படைப்புலயும் என்ன தப்பு இருக்குனு தெரியல. அவங்க அவங்க வாழ்கைய எப்படி வாழணும்னு தீர்மானிக்கிற உரிமை, அவங்க அவங்களுக்கு தான் இருக்கு. நீ இப்படித்தான் வாழணும்னு இன்னும் எத்தன வருஷம் தான் கட்டாய படுத்திட்டே இருப்பீங்க. கார்த்திக் சுப்புராஜ் சார், ‪#‎தந்தை‬‪#‎பெரியார்‬ ஐ ரொம்ப படிச்சிருபாருன்னு நினைக்கிறன். பெண்கள் கற்புங்குற விசயத்துல இருந்து வெளிய வரணும் ன்னு பெரியார் நினச்சத தான் இங்க அந்த குறிலும் செயல்படுத்தி இருக்கு. அதுல தப்புன்னும் சொல்ல முடியாது.

அப்பறம் அந்த மூணாவது software professional குறில் , அது தனக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கைய அமச்சிக்கனும்னு முயற்சி பண்ணி அதுல கிட்ட தட்ட success மாதிரி காட்டிருக்காங்க. ஆனா யார் கண்டா, அந்த நெடிலும் பிற்காலத்துல நான் ஆண் ங்குற திமிர காட்டினாலும் காட்டும்.

என்னடா இவன், வெறும் நெடிலையும், குறிலையும் பத்தி மட்டும் பேசுறான், யாரு எந்த நெடில், யாரு எந்த குறில்லுனு சொல்லலையே ன்னு நினைக்கிறது பதிலா, படத்த போயி பார்த்து நீங்களே தெரிஞ்சிகங்க.

முடிவுல எனக்கு கொஞ்சம் ஏமாற்றமே. ஏன்னா, பொதுவாவே எனக்கு சோக செண்டிமெண்ட் புடிக்காது. கொஞ்சம் சந்தோசமான முடிவா இருக்கணும்னு நினைப்பேன். ஆனா ஒருவேள நான் எதிர்பார்த்த முடிவ கொடுத்திருந்தா, டைரக்டர் சொல்ல வந்தது சரியா ரீச் ஆகாம போயிருக்கும்.

சாக்லேட் ப்ரௌனி , பாப்கார்ன் கொறிக்கிறதையும் தாண்டி, ரசிச்சி பார்க்க வேண்டிய நல்ல படம் தான் இந்த இறைவி.‪#‎கார்த்திக்சுப்புராஜ்‬ சாருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

-முகநூலில். ஜெயகணபதி.

Related Images: